சிஎம் விஜய் மகனை இழுத்த மார்க்கண்டேயன் மகன்! ஸ்டாலின் ஆட்சியில் கைதானாரே அவரே தான்! ப்ளாஷ்பேக்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தமிழக முதல்வர் குறித்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதால் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனனை கைது செய்து 14 நாள் அதாவது ஆகஸ்ட் 3 ந் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் மார்க்கண்டேயனின் மகன் 'சிஎம் விஜய்' குறித்து பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முன் நீதிபதி குறித்து முழக்கமிட்டதாக தமிழக போலீசாரால் வாயை மூடி கைது செய்யப்பட்டவர் தான் மார்க்கண்டேயனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த ஜூலை 18ஆம் தேதி இரவு திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு மிக ஆவேசமாக உரையாற்றினார்.

சட்டமன்றத்தை கூட்டினால் பூட்டுவேன் என சொன்ன முதலமைச்சர் விஜயின் எலும்புகளை உடைப்போம் என பகிரங்க எச்சரிக்கை விடுத்தது பெரும் பரபரப்பையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி தவெக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

Markandeyan dmk mk stalin

மார்க்கண்டேயன்

புகாரின் பேரில் நேற்று அதிகாலையில் மார்க்கண்டேயனின் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். இதனை அறிந்து அங்கு எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஆதரவாளர்களும். திமுக முன்னாள் அமைச்சர்களும். எம்எல்ஏக்களும் திரண்டனர். அவர்களை அப்புறப்படுத்திய போலீசார் எம்எல்ஏ மார்க்கண்டனை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். கிட்டத்தட்ட 11 மணி நேரம் தொடர் விசாரணை நடைபெற்றது.

நீதிமன்ற காவல்

இந்த நிலையில் இரவு, கடுமையான குற்றம் மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டு அவமதித்தல், இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை தூண்டும் பொய்யான தகவல் பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகள் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து இரவு நேரத்தில் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற போலீசார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் மகன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மார்க்கண்டேயன் மகன்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள மார்க்கண்டேயனின் மகன்," சிஎம் சார்.. உங்க மகன்தான் உங்க கூட இல்ல.. ஆனா எனது அப்பா எனக்காகவும் விளாத்திகுளம் மக்களுக்காகவும் இருக்கிறார். அவர் எங்களுடன் இருக்க வேண்டும். அவருக்கு உடல் பிரச்சனை உள்ளது. துப்பாக்கி முனையில் அவரை மிரட்டுகிறார்கள்" என பேசி இருந்தார். இந்நிலையில் இதற்கு முன்பு இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே? என தேடிய நெட்டிசன்கள். கடந்த திமுக ஆட்சியில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர் தான் இவர் என்பதை கண்டுபிடித்திருக்கின்றனர்.

திமுக ஆட்சியில் கைது

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனின் மகன் அக்ஷய் சட்டக்கல்லூரி மாணவராக இருக்கிறார். கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் மதுரை விமான நிலையத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அப்போது திடீரென திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதியை விமர்சித்தும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினார். ஸ்டாலின் முன் திடீரென அவர் முழக்கம் எழுப்பியதால் வாயை பொத்தி அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இது முதலமைச்சருக்கு எதிரான எதிர்ப்பு அல்ல நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என பின்னர் விளக்கம் அளித்தார். தற்போது அந்த வீடியோக்களை தமிழக வெற்றிக்கழகத்தினர் பரப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+