கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் மெகா மருத்துவ முகாம்
தூத்துக்குடி: தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் ஆகியோரது ஏற்பாட்டில் பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை,சென்னை கற்பக விநாயகா பல் மருத்துவ கல்லூரி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் நவம்பர் 23 மற்றும் 24ம் தேதிகளில் தூத்துக்குடியில் உள்ள அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் நடந்தது.

இந்த இலவச மருத்துவ முகாமில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேர் கலந்து கொண்டனர். அப்போலோ சிறப்பு மருத்துவ மனை சார்பில் இரத்தம், சிறுநீர் பரிசோதனை, இசிஜி, எக்கோ, ஸ்கேன் மற்றும் பெண்களுக்கான புற்றுநோய் பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது.
இம்மருத்துவமனை சார்பாக இருதய சிகிச்சை நிபுணர்கள்,பெண்கள் நல மருத்துவர், பொது மருத்துவர், பொது அறுவை சிகிச்சை நிபுணர், நுரையீரல் சிகிச்சை நிபுணர், மூட்டு மற்றும் எலும்பு மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்த இலவச மருத்துவ பரிசோதனையில் 990 பேர் கலந்து கொண்டனர்.

கற்பக விநாயகா பல் மருத்துவ கல்லூரி சார்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் 510 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் பல் சுத்தம் செய்தலுக்காக 154 பேரும், பல் சொத்தை அடைத்தலுக்காக 55 பேரும், பல் எடுப்பதற்காக 49 பேரும், செயற்கை பல் பொருத்துதலுக்காக 53 பேரும் கலந்துகொண்டு பலன் பெற்றனர். 54 பேர் எக்ஸ்ரே எடுத்தலில் பலன் பெற்றனர்.
அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாமில் 500 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 225 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications