அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சிக்கல்? சொத்து குவிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணை
தூத்துக்குடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை இன்று மீண்டும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவர் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்.

இதற்கிடையே தான் அனித ராதாகிருஷ்ணன் மீது சொத்து குவிப்பு புகார் எழுந்தது. அதாவது அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார்.
இந்த வேளையில் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் தனது வருமானத்தை மீறி 4.90 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக கூறப்பட்டது. இதையடுத்து 2006ல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தம், மகன்கள் ஆனந்த பத்மநாதன், ஆனந்த மகேஸ்வரன், ஆனந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கடந்த ஜனவரி 10ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சுவாமிநாதன் வழக்கை விசாரித்தார். மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் விடுப்பில் இருந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கை அவர் ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதன்படி இன்று மீண்டும் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்பான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications