ஏய் தம்பி.. துணை மேயருக்கு சாப்பாடு வச்சு ஒரு தட்டு எடுத்துக் கொடு.. ஆர்டர் போட்ட அமைச்சர் கீதாஜீவன்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற காலை உணவுத் திட்டம் தொடக்க விழாவில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் அமர இடமின்றி தவித்ததை கண்ட அமைச்சர் கீதா ஜீவன், துணை மேயருக்கே இடமில்லையா என கலாய்த்தார்.
மேலும், ''ஏய் தம்பி.. துணை மேயருக்கு சாப்பாடு வச்சு ஒரு தட்டு எடுத்துக் கொடு..'' என அங்கிருந்த ஒருவரிடம் ஆர்டரும் போட்டார் அமைச்சர் கீதாஜீவன்.
இதனிடையே கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்களிடம், ''இப்படிச் சாப்பிட்டால் எப்போது சாப்பிட்டு முடிப்பது, நல்லா எடுத்துச் சாப்பிடுங்க'' என அட்வைசும் தந்தார்.

தூத்துக்குடி பள்ளி
தமிழகத்தின் முன்னோடி திட்டங்களில் ஒன்றான காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்த நிலையில், இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் அந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் கனிமொழியுடன் இணைந்து காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாணவர்களோடு மாணவராக வரிசையில் அமர்ந்து சிற்றூண்டியை சுவைத்து பார்த்தார்.

துணை மேயருக்கு இடம்
அப்போது மாவட்ட ஆட்சியர், மேயர் ஜெகன் பெரியசாமி என எல்லோரும் அமர்ந்துவிட தூத்துக்குடி துணை மேயரான ஜெனிட்டாவுக்கு மட்டும் இடமில்லாமல் நின்றுக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அமைச்சர் கீதாஜீவன், துணை மேயருக்கே இடமில்லையா என கலாய்த்தார். மேலும், ''ஏய் தம்பி.. துணை மேயருக்கு சாப்பாடு வச்சு ஒரு தட்டு எடுத்துக் கொடு.. அவங்களும் உட்காரட்டும்'' என அங்கிருந்த ஒருவரிடம் ஆர்டர் போட்டார்.

காய்கறி
கிச்சடியில் இருந்த காய்கறிகளை தனது அருகில் அமர்ந்து சாப்பிட்ட மாணவன் தட்டில் ஒதுக்கி வைத்திருப்பதை பார்த்த அமைச்சர் கீதாஜீவன், இதையெல்லாம் சாப்பிட்டால் தான் சத்து கிடைக்கும் என அறிவுரை நல்கினார். மேலும், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்களிடம், ''இப்படிச் சாப்பிட்டால் எப்போது சாப்பிட்டு முடிப்பது, நல்லா எடுத்துச் சாப்பிடுங்க'' என அட்வைசும் தந்தார்.

மாவட்ட ஆட்சியர்
மாணவிகள் சாப்பாட்டை தட்டில் வைத்துக் கொண்டு இருந்ததை கவனித்த மாவட்ட ஆட்சியர், ''யார் முதலில் சாப்பிடுகிறோம் என பார்க்கலாமா, போட்டி வைத்துக் கொள்ளலாமா'' என வினவினார். 'ம்' என்று தலையாட்டிய ஆரம்பப் பள்ளி மாணவிகள் கலெக்டருடன் போட்டி போட்டு வேக வேகமாக சிற்றூண்டி சாப்பிட்டனர்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
"நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர்..!" கண்ணீர் மல்க பேசிய நடிகை தீபாவின் அப்பா... நேரில் ஆறுதல் கூறிய கீதா ஜீவன்












Click it and Unblock the Notifications