திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்களை இழிவுப்படுத்திய அமைச்சர் ரமேஷ்! அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை இழிவுப்படுத்திய அறநிலையத்துறை அமைச்சருக்கு எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: புகழ்பெற்ற அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகை தருகிறார்கள்.

tiruchendur ramesh

திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற சுவாமி தரிசனம் பெறுகின்றனர். வைகாசி விசாகத் திருவிழா நாளான இன்று சுவாமி தரிசனத்திற்காக விரதம் இருந்து காவடி ஏந்தி பல நாட்கள் கால்நடையாக நடந்து வந்தும் சுவாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

இந்நிலையில் திடீர் ஆய்வு என்ற பெயரில் புதியதாக பொறுப்பேற்ற அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் காலம் காலமாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் திரு சுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை சார்ந்த அர்ச்சகர்களை இழிவு படுத்தியது மிகவும் கண்டனத்துக்குரியது

பல நூற்றாண்டுகளாக திருச்செந்தூர் திருக்கோயிலில் வேண்டுதலுடன் வருகின்ற பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கான வழிகாட்டுதலும் உதவியும் திரு சுதந்திர அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர். பல வெளியூர்களிலிருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் பல்வேறு குடும்பங்களுக்கு கட்டளை ஐயர்களாக திரு சுதந்திர அர்ச்சகர்கள் மரபு வழி பொறுப்பை நிறைவேற்றி வருகின்றனர்.

அறநிலையத்துறையைச் சார்ந்தவர் அல்லாத திரு சுதந்திர அர்ச்சகர்கள் காலம் காலமாக மரபு வழியாக இந்த சுவாமி தரிசன உதவியை செய்து வருகின்றனர் பக்தர்கள் தரும் தட்சணையை பெறுகின்றனர் இந்த நிலையில் திரு சுதந்திர அர்ச்சகர்கள் செய்யும் ஆன்மீகப் பணியை இழிவுபடுத்தி உள்ளார் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்.

அறநிலையத்துறை அமைச்சரின் இந்த செயல் திரு சுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தினரிடம் பெரும் மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது மேலும் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான வழிமுறை பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடாதது சரியானது அல்ல என்று ஊர் மக்கள் கருதுகின்றனர்.

திருச்செந்தூர் தொகுதி அனைத்து சமுதாய மக்களின் நலனை வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு ஏழாவது முறையாக வெற்றி பெற்ற சட்டசபை உறுப்பினர் என்ற முறையில் எனது பணி இருந்து வரும் நிலையில் திரு சுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை இழிவு படுத்தியதோடு அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் புகழை சிறுமைப்படுத்திய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு எனது வன்மையான கண்டனத்தை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விரைவு தரிசனத்திற்கு பணம் பெறுவதாக வந்த புகாரை அடுத்து மாஸ்க் அணிந்து கொண்டு ஆய்வுக்கு சென்ற இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், அங்கிருந்த அர்ச்சகரிடம் விரைவு தரிசனத்திற்கு எவ்வளவு கட்டணம் என கேட்டதற்கு ஒருவருக்கு ரூ 1000 என அவர் தெரிவித்தாராம்.

உடனே "நாங்கள் 4 பேர் இருக்கிறோம்" என ரமேஷ் சொன்னதும் அந்த அர்ச்சகர் ஒரு ஜிபே எண்ணை அனுப்பி ரூ 4000 செலுத்துமாறு கூறினாராம். அதன்படி ரமேஷும் பணத்தை செலுத்தினாராம். இதையடுத்து கோயில் நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு செய்த போது ரமேஷ் இந்த ரூ 4000 முறைகேடு குறித்து அந்த அர்ச்சகரை கண்டித்தாராம்.

இதையடுத்து அந்த அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார் ரமேஷ். ஆனால் அவரிடம் இருந்து மன்னிப்பு கடிதம் வாங்கியதாக தகவல்கள் கிடைத்தன. ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வீல் சேருக்காக லஞ்சம் பெற்றதாக ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அர்ச்சகர் மீது அமைச்சருக்கு ஏன் கரிசனம், குறிப்பிட்ட சமூகத்தினர் மீது மட்டும் அவர் நடவடிக்கை எடுக்க மாட்டாரா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு ரமேஷ் விளக்கமளிக்கையில் நான் பெற்றது மன்னிப்பு கடிதம் அல்ல, விளக்கக் கடிதம் என தெரிவித்திருந்தார். மேலும் அர்ச்சகர் அந்த கோயிலில் பூஜை செய்ய தடை விதித்திருந்தார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த இரு காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+