'மோடியின் தொலைநோக்கு திட்டத்தால் இந்தியா சக்தி மிக்க நாடாக உயர்ந்துள்ளது' - மத்திய அமைச்சர் பேச்சு
தூத்துக்குடி: பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டத்தின் காரணமாக இந்தியா சக்தி மிக்க நாடாக உயர்ந்து வருகிறது என மத்திய கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் கூறினார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.100 கோடியில் பொருளாதார மேம்பாட்டு மண்டலம் அமைப்பது உள்பட ரூ.231.21 கோடி மதிப்பில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் மத்திய கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அடிக்கல் நாட்டு விழா
குறிப்பாக தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 1300 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் கடலோர வேலைவாய்ப்பு அபிவிருத்தி திட்டத்திற்கு (Tuticorin SPEEDZ) அடிக்கல் நாட்டினார். இதேபோல் ரூ.16 கோடி செலவில் நிலக்கரி சேமிப்பு சாலை மற்றும் வடிகாலினை மேம்படுத்துதற்கான பணியினையும் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ரூ.65.53 கோடி செலவில் உள்துறைமுக வளர்ச்சி பணிகளான (துறைமுக நுழைவுவாயிலை அகலப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்தப்பட்ட பகுதியை ஆழப்படுத்துதல்) பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

LED ஒளிவிளக்கு பயன்பாடு
பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, ரூ.26.93 கோடி செலவினாலான பசுமை துறைமுக திட்டங்களான 100 சதவிகிதம் LED ஒளிவிளக்கு பயன்பாடு மற்றும் மின்சாரத்தால் இயங்க கூடிய கார்கள் மற்றும் 140 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின் ஆலைகள் ஆகியன தொடங்கி வைக்கப்பட்டது. இதேபோல் பொதுமக்கள் பயன்படுத்த கூடிய வாகன மின்வூட்டி மையங்கள், 2 மெகாவாட் காற்றாலை, 400 கிலோவாட் மேற்கூரை சூரியமின் ஆலை ஆகிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

60 சதவிகிததற்கு
தொடர்ந்து நிகழ்ச்சியில் மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து மற்றும் ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனாவால் பேசியதாவது:- வருகிற 2025-ம் ஆண்டிற்குள் நமது நாடு 5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார வளர்ச்சியினை அடையும். இதை அடைவதற்கு முக்கிய காரணியான போக்குவரத்து தளவாட செலவுகளை குறைக்க அனைத்து முயற்சியையும் அரசு செய்து வருகிறது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தால் எடுக்கப்பட்டுள்ள பசுமை துறைமுக முயற்சிகள், 2030-ம் ஆண்டிற்குள் நம் நாட்டில் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியின் பங்கை 60 சதவிகிததற்கு அதிகரிக்க அனைத்து பெரிய துறைமுகங்களுக்கும், வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தரநிலையை உருவாக்கியுள்ளது.

சக்தி மிக்க நாடாக
மேலும் அவர் கூறுகையில், '' பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டத்தின் காரணமாக இந்தியா சக்தி மிக்க நாடாக உயர்ந்து வருகிறது. முன்பு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபடி, இந்திய அரசு வ.உசிதம்பரனார் துறைமுகத்தினை நாட்டின் கிழக்கு கடற்பகுதியின் சரக்குபெட்டக பரிமாற்ற முனையமாக மாற்ற அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொள்ளும்'' என்று கூறினார்.
-
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications