Kanimozhi: தமிழக சட்டசபையே ரீல்ஸ்காக நடக்குது! ஒரே போடு போட்ட கனிமொழி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய கேள்விக்குறியாக தவெக ஆட்சியில் மாறி இருக்கிறது. சட்டமன்றமே ரில்ஸ்க்காகத்தான் நடத்தப்படுகிறது என திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.

திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.

Kanimozhi

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு தொடர்ந்து குற்றங்கள் பெருகிக்கொண்டே வருகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ஆணவக் கொலைகள், லாக்கப் மரணங்கள் என்று சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருக்கக் கூடிய சூழலை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதைவிட கவலைக்குரிய ஒன்று குற்றங்களில் பல குற்றங்களை செய்திருக்கக் கூடியவர்கள் தவெகவை சேர்ந்தவர்களாக நாம் காணக் கூடிய ஒரு சூழல் இருக்கிறது.

சில நேரங்களில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல நேரங்களில் அங்கே இருக்கக் கூடிய நிர்வாகிகள் மீது குற்றம் சுமத்தப்படும் போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய கேள்விக்குறியாக இந்த ஆட்சியில் மாறி இருக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தவெகவின் அமைச்சர்கள் இன்றும் ரில்ஸ் மோடில் தான் இருப்பதாக கூறியிருக்கிறார்.. இது குறித்த கேள்விக்கு? அவர் அரசு பற்றி பேசுகிறார் என்றால் அவர் கூட்டணியில் இருக்கக் கூடிய ஆட்சி அது.

சட்டமன்றமே ரில்ஸ்க்காகத்தான் நடத்தப்படுகிறது என்பதை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+