நிலவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்.. விரைவில் சாதிக்கும் இஸ்ரோ! அடித்து கூறிய மயில்சாமி அண்ணாதுரை
தூத்துக்குடி: நிலவு குறித்த ஆய்வுகள் சமீபக காலாக தீவிரமடைந்துள்ள நிலையில், நிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதற்கான திறன் நமக்கு இருக்கிறது என்று முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.
உலகின் எல்லா பழமையான நாகரீகங்களிலும் நிலவு குறித்த குறிப்பு இருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் நிலவு குறித்து ஏராளமான குறிப்புகள் இடம் பெற்றிருக்கிறது. நிலவை தமிழர்கள் காலண்டராக பயன்படுத்தி நாட்களையும், மாதங்களையும் கணக்கிட்டு வந்திருக்கின்றனர். அடுத்தடுத்த காலங்களில் நிலவு குறித்த புரிதல், ஆய்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தன.

இதற்கு முக்கிய காரணம் 1969ல் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி எடுத்து வைத்ததுதான். இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மனிதர்கள் மத்தியில் பெரும் அறிவியல் எழுச்சியை பாய்ச்சியது. ஏறத்தாழ எல்லோரும் நிலவு குறித்து படிக்க தொடங்கினார்கள். விண்வெளியை புரிந்துக்கொண்டார்கள். மூடநம்பிக்கைகள் தகர்ந்தன. வெல்லக்கட்டியை பார்த்த எறும்பை போல மக்கள் அறிவியலை நோக்கி வந்தார்கள். பழமைவாத சித்தாந்தங்களை கொண்ட நாடுகள் கூட, பள்ளிகளில் விண்வெளி துறை சார்ந்த பாடங்களை கட்டாயமாக்கியது. இது சாதாரண விஷயமல்ல!
இந்த ஆர்வம் இந்திய விண்வெளித்துறையான இஸ்ரோவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடிக்கும் அளவுக்கு இந்த தாக்கம் இஸ்ரோவை பாதித்தது. இந்நிலையில், நிலவில் விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்கும் திறன் நமக்கு இருக்கிறது என்று முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வேல்ஸ் வித்யாலயா பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில் இதை கூறியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது,
வெண்ணிலவே..வெண்ணிலவே! சர்வதேச நிலவு தினம்..அடேங்கப்பா நிலாவுல இவ்வளவு விஷயம் இருக்கா! ஆச்சரிய தகவல்!
“நிலாவில் ஆம்ஸ்ட்ராங் முதலில் இறங்கி இருக்கலாம். ஆனால், நிலவில் நீர் இருக்கிறது என்பதை சொன்னது நாம் தான். நிலவின் தென் துருவத்தில் மெதுவாக இறங்க முடியும் என்று நிரூபித்தவர்கள் நாம். முதல் முயற்சியில் செவ்வாய் கிரகத்தை அடைந்தவர்கள் நாம். நிலாவில் சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதற்கான திறன் நமக்கு இருக்கிறது. என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதை விட எப்படி கற்றுக் கொள்கிறோம் என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றி அதற்கு மரியாதை செலுத்தும் போது நம்முடைய தேசியக் கொடி மேலே உயர்த்த நாம் செயல்பட வேண்டும் என்பதை குழந்தைகள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும், நிலா மற்றும் செவ்வாயில் இந்திய தேசியக் கொடியை நிலை நிறுத்துவதற்கான வாய்ப்பினை நான் உருவாக்க வேண்டும் என்று குழந்தைகள் நினைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications