‛‛வாய்ப்பே இல்லை’’.. கோரிக்கை வைத்து நின்ற தங்கம் தென்னரசு! மீண்டும் அழுத்திய நிர்மலா சீதாராமன்
தூத்துக்குடி: தூத்துக்குடி மழை வெள்ள ஆய்வின்போது தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பக்கத்தில் நிற்க தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதி அமைச்சர் நிதி அமைச்சர்மீண்டும் உறுதியாக கூறினார். அதோடு அதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார்.
இந்த மாதம் தொடக்கத்தில் தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டன. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதையடுத்து கடந்த 17 , 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர்ந்து 2 நாட்களாக கனமழை கொட்டியது. இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டன. வீடுகள் இடிந்ததோடு, சிலர் உயிரிழந்தனர். மேலும் கால்நடைகள் பலியாகின.
இதனால் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் சார்பில் பொதுமக்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது இருமாவட்டங்களில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுஒருபுறம் இருக்க சென்னை உள்பட 8 மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்க ரூ.21 ஆயிரம் கோடி நிவாரணமாக மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. தற்போது வரை மத்திய அரசு ரூ.450 கோடி மட்டுமே வழங்கி உள்ளது. இதனால் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் சமீபத்தில் பேட்டியளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அரசை விமர்சனம் செய்தார். அதோடு தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்றார்.
72 பக்க ஃபைல்.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அளித்த தங்கம் தென்னரசு.. ஸ்டாலினின் கோரிக்கை!
இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்தன. இந்நிலையில் தான் நிர்மலா சீதாராமன் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்கள் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இன்று இரவில் தூத்துக்குடி உமரிக்காடு பகுதியில் வெள்ள பாதிப்பை இரவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார். இந்த வேளையில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் அவருடன் இருந்தனர்.
‛சரியும் ஆணவ சாம்ராஜ்யம்’.. திமுகவுக்கு சாபமிட்டு சபதமேற்ற தமிழிசை.. ஆக்ரோஷத்துக்கு காரணமான ட்ரோல்
அப்போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை அவரிடம் வைத்தனர். கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். இந்த வேளையில் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் நிர்மலா சீதாராமன் புறக்கணித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
‛‛மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை. இதுவரை தேசிய பேரிடராக எதுவும் அறிவிக்கப்பட்டது இல்லை. கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய வங்கிகள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார். தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என நிர்மலா சீதாராமன் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இன்று மீண்டும் அதனை உறுதிப்படுத்தி உள்ளார்.
முன்னதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தென் மாவட்டங்களில் வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசு சார்பில் 72 பக்க கோரிக்கை மனு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications