Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛சரியும் ஆணவ சாம்ராஜ்யம்’.. திமுகவுக்கு சாபமிட்டு சபதமேற்ற தமிழிசை.. ஆக்ரோஷத்துக்கு காரணமான ட்ரோல்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: ‛‛மக்கள் விரோத ஆணவ சாம்ராஜ்யம் சாயப்போகிறது.. சரியப்போகிறது.. நீங்கள் சரியும் சரித்திரத்தை எழுத நான் தயார்... இது அப்பழுக்கற்ற பொது வாழ்வில் வாழும் ஒரு பெண்ணின் சபதம்’’ என திமுகவுக்கு எதிராக திடீரென தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொந்தளித்துள்ளார்.

கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்தது. வரலாறு காணாத வகையில் 2 நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகளவில் பாதிக்கப்பட்டன.

I am ready to write the history of your collapse, Tamilisai Soundarajan slams DMK after troll

இந்த 2 மாவட்டங்களில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் ஆடு, மாடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதோடு, வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் வயதானவர்கள் பலியாகினர். இதையடுத்து ஹெலிகாப்டர், படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர். மழை நீர் வெளியேற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

தற்போது தூத்துக்கு, திருநெல்வேலி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் அரசு சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார்.

முன்னதாக தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார். அப்போது அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் அவர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுபற்றி தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ‛‛நான் நேரடியாக முதல்வரை பார்த்து கேட்கிறேன். 18ஆம் தேதி இங்கே மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும் பொழுது வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் சந்திக்க வேண்டுமா? அல்லது "மக்களுடன் முதல்வர்" என்று கோவையில் நிகழ்ச்சி நடத்த வேண்டுமா?

வெள்ளம் சூழ்ந்த பிறகு அதற்கு அடுத்த நாளும் வரவில்லை. கூட்டணிக் கட்சிக்காக டெல்லி சென்றுவிட்டார். ஆனால் இப்போது பிரதமரை பார்க்க டெல்லி போனதாக கூறுகிறார்கள். உண்மையில் மாநில அரசு வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுப்பதில் தோல்வி அடைந்திருக்கிறது. அதோடு சென்னை மக்களை எப்படி மீட்டு எடுத்தோமோ அதேபோல தென்பகுதி மக்களை மீட்டெடுப்போம் என முதல்வர் கூறுகிறார். உண்மையில் சென்னையை நீங்கள் மீட்டெடுக்கவில்லை. சென்னை மக்கள் தாங்களாகவே மீண்டு எழுந்தார்கள்’’ என தெரிவித்து இருந்தார்.

தமிழிசை சவுந்தரராஜனின் இந்த பேச்சுக்கு திமுக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் சேகர்பாபு, சபாநாயகர் அப்பாவு உள்பட பல தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜனை விமர்சனம் செய்துள்ளனர். அதோடு தமிழிசை சவுந்தரராஜனுக்கு வெள்ள பாதிப்பு பகுதியில் என்ன வேலை ? எனக்கேட்டு திமுகவினர் அவரை வலைதளங்களில் ட்ரோல் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கோபம் அடைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மக்களின் துயரத்தைக்கண்டு துயருற்று துடிதுடித்து மக்களின் குரலாய் பேசியதற்கு... திண்டாடும் மாடலை வைத்து.... திண்டாடிக் கொண்டிருப்பவர்கள்,என்னை சமூக வலைதளங்களில் குத்திக்கிழித்து தனிப்பட்ட முறையில் காயப்படுத்தி எக்காளமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்... அவர்களின் மக்கள் விரோத ஆணவ சாம்ராஜ்யம் சாயப்போகிறது...சரியப்போகிறது... இது சபதம்!

அதிகாரத்தில் ஆணவ ஆட்டம் போட்டவர்கள்... ஆடி ஒடுங்கியிருக்கும் சரித்திரத்தை நான் இங்கு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்...(தி)க்கு (மு)க்காடி (க)ளித்துக் கொண்டிருப்பவர்கள் ஆடி ஒடுங்குவதையும் அங்கு பார்ப்பேன்....எவ்வளவு வேண்டுமானாலும் சமூக வலைத்தளங்களில் காயப்படுத்துங்கள்... சமூகத்திலும் காயப்படுத்துங்கள்..... அந்த ரத்தத்தில் தோய்த்து.... நீங்கள் சரியும் சரித்திரத்தை எழுத நான் தயார்.....
இது அப்பழுக்கற்ற பொது வாழ்வில் வாழும் ஒரு பெண்ணின் சபதம்!’’ என காட்டமாக கொந்தளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+