60 வேட்பாளர்கள் ரெடி.. சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணியா? போட்டு உடைத்த சீமான்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஆதரவாகவே சீமான் இருந்து வருவதால், வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி + தவெக கூட்டணி ஏற்படலாம் என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான் அளித்துள்ள பதிலை இங்கே பார்க்கலாம்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலை டார்கெட் செய்து கட்சி பணிகளை படிப்படியாக தீவிரம் காட்டி வருகிறார் விஜய். அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. வாகை மலருடன் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் விஜய்யின் கட்சி கொடி உள்ளது.

seeman vijay naam tamilar party

வரும் 23 ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார் விஜய். இதற்கான பணிகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். தனது கட்சியின் கொள்கைகள், கொடியில் இடம் பெற்றுள்ள யானை மற்றும் வாகை மலருக்கான விளக்கம் என அனைத்தையும் அன்றைய தினம் சொல்வதாக கூறியிருக்கிறார் விஜய். தவெக கட்சி தொடங்கியதில் இருந்தே விஜய்க்கு எதிராக விமர்சனங்கள் அதிகம் எழுத்தொடங்கியிருக்கின்றன.


ஆனால், விஜய்க்கு தொடக்கத்தில் இருந்தே ஆதரவாகவே சீமான் பேசி வருகிறார். இதனால், வரும் தேர்தலில் விஜய் கட்சியுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்குமா? என்ற கேள்வியும் எழுந்தது. குறிப்பாக அண்மையில் தவெக கொடியில் இடம் பெற்ற சின்னத்தில், சர்ச்சை எழுந்தது. அப்போதும் விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான், "ஸ்பெயினில் மட்டும்தான் யானை இருக்கிறதா.

எங்கள் ஊரில் இல்லையா. யானை ஒரு தனி மனிதனுக்கோ, மாநிலத்துக்கோ, கட்சிக்கோ சொந்தமானதா. எங்கள் கட்சி சின்னத்துக்கு புலியை கேட்டபோது தேர்தல் ஆணையம், 'அது தேசிய விலங்கு' என்று பேசியிருந்தார். தொடர்ந்து விஜயுடன் அனுசரணையாகவே சீமான் இருந்து வருவதால், வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி + தவெக கூட்டணி ஏற்படலாம் என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் அடிபட தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில், விஜய் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார் சீமான். இது தொடர்பாக இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான் கூறியதாவது:- நான் தனித்து போட்டியிடுகிறேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து தான் போட்டியிடுகிறது. தற்போது 60 தொகுதிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்து விட்டேன். இவ்வாறு சீமான் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+