"காவாலைய்யா.. நு காவாலைய்யா" பாடியது மட்டுமின்றி.. திடீரென மேடையில் டான்ஸ் ஆடிய சீமான்.. என்ன காரணம்
தூத்துக்குடி: நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென காவாலைய்யா என்று பாடி டான்ஸ் ஆடிய சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

டான்ஸ்: இந்தக் கூட்டத்தில் பேசிய சீமான் திமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அங்குப் பேசிய அவர், "இது கொள்கையால் சேர்ந்த கூட்டம். நான் என்ன குத்து பாடல்களை போட்டா கூட்டத்தைக் கூட்டுகிறேன். மாநாட்டில் போய் வா நு காவாலைய்யா.. நு காவாலா என்று பாடலை போட்டு ஆட்டம் போடுகிறார்கள்" என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் மேடையிலேயே இரண்டு ஸ்டெப் டான்ஸும் ஆடினார்.
தொடர்ந்து பேசிய அவர், "கூட்டம் நடக்கும் போது கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பதற்காக நு காவாலாய்யா காவாலாய்யா.. ரா.. ரா ரா என்று பாடல் போடுகிறார்கள். அங்குள்ள மக்கள் போ போ போ என்று சொல்லிப் போய்விடுகிறார்கள். அடுத்து அவர்கள் மேடையில் பேசும் போது மது, சூது என்று இருக்கிறார்கள். இதையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு நான் வந்துள்ளேன்.
மதுக்கடைகள்: அதைச் சொன்னால் மதுக் கடையை எப்படி ஒழிக்க முடியும் எனக் கேட்கிறார்கள்.. எப்படி என்று கேட்டால் ஆட்சியை ஒரு முறை கொடுத்துப் பாருங்கள்.. 5 வருடம் கொடுத்து பாருங்க என்ன செய்கிறேன் என்று அப்போது தெரியும். போதும் என்று நாம் சொல்வது சோற்றிலும் கள்ளு குடிக்கும் போது மட்டும் தான். எவ்வளவு பெரிய குடிகாரனாக இருந்தாலும் 2 லிட்டருக்கு மேல் குடிக்க முடியாது.
200 ரூபாய் சம்பாதிக்கும் நபராக இருந்தாலும் அவர்களுக்குக் கள் தான் சரியாக இருக்கும். குடும்பத்தை நடத்தவும் அவர்களுக்குக் காசு இருக்கும். ஆனால் இப்போது எவ்வளவு குடித்தாலும் பத்தல என்கிறார்கள். வீட்டுக்குப் போகக் காசு இல்லாத அளவுக்குக் குடிக்கிறார்கள். குடிக்கக் காசு இல்லை என்றால் மனைவியின் தாலியை அறுத்துவிடுகிறார்கள்.
வாக்குறுதிகள்: தேர்தல் சமயத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் அதைக் கொடுக்கிறேன். இதைக் கொடுக்கிறேன் என்கிறார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு காதில் பஞ்சை வைத்துக் கொண்டு செல்கிறார்கள். கூட்டுறவு கடனை ரத்து செய்கிறோம், நகைக் கடனை ரத்து செய்வோம் என்றார்கள். அதையெல்லாம் ஏன் செய்யவில்லை.
இவர்கள் நாம் கேட்கும் எதையும் செய்ய மாட்டார்கள்.. தேவையில்லாத விஷயங்களைத் தான் செய்வார்கள். சிஎஸ்கே தமிழ்நாட்டின் அணி என்கிறார்கள். ஆனால், அதில் அணியில் தமிழர்கள் யாருமே இல்லை.. அதற்காக வருத்தம் வேண்டாம். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் 11 பேரும் தமிழர்கள்தான் என்ற நிலை தான் இருக்கும். நானும் வந்து ஆடுவேன்..
திமுக மீது தாக்கு: நாங்கள் 'மோடிக்கும், EDக்கும் அஞ்சமாட்டோம்' என்று கூறிய தந்தையும் ஏன் அவரை அங்குக் கூட்டி வருகிறார்கள். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்தில் விளையாட்டுப் போட்டிகளையும் நலத்திட்டங்களையும் வழங்க மோடியை அழைத்து வந்துள்ளனர் என்று சொல்ல முடியுமா... பாஜக ஆளும் மாநிலங்களுக்குக் கூட நேரில் செல்வதில்லை.
கேலோ இந்தியா என்று போட்டியை நடத்துகிறார், கேலோ என்றால் என்ன என்று கேட்டால் இந்தியில் விளையாட்டு என்கிறார்கள். போன முறை கேட்டதற்கு "இந்தி தெரியாது போடா" என்கிறார்கள். இந்த முறை ஆட்சிக்கு வந்த பிறகு "இந்தி தெரியும் வா" என்கிறார்கள். எதற்கு இந்த ஏமாற்று வேலை" என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications