ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது... முதற்கட்டமாக 34 மெட்ரிக் டன் உற்பத்தி..!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் விநியோகம் இன்று தொடங்கியது.
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஆக்சிஜனுடன் புறப்பட்ட முதல் டேங்கர் லாரி, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றது. இதற்கு அடுத்ததாக சென்னை, கோவை, உள்ளிட்ட நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.

நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வந்த நிலையில், தாங்களாக முன்வந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்து கொடுப்பதாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கூறியது.
இதையடுத்து தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தற்காலிக அனுமதி கொடுக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு தேவையான மின்சாரம், குடிநீர், உள்ளிட்ட இதர வசதிகளை தமிழக அரசே செய்து கொடுத்தது. 320 பணியாளர்களை கொண்டு ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதுவரை நடைபெற்ற சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில் நேற்றிரவு முதல் ஆக்சிஜன் உற்பத்தி அங்கு தொடங்கப்பட்டது.
அதனடிப்படையில் இன்று முதல் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் நடைபெறுகிறது. இதற்காக ஸ்டெர்லைட் ஆலை முன்பாக ஆக்சிஜனை ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன. முதல் நாளான இன்று 34 மெட்ரிக் டன் அளவு மட்டுமே அங்கு ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாளை மறுதினம் முதல் ஆக்சிஜன் உற்பத்தி 40 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில், ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து விநியோகம் செய்யப்படும் ஆக்சிஜன் உயிரிழப்புகளை பெருமளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications