போலீஸ் காவல் தர முடியாது.. எம்எல்ஏ மார்க்கண்டேயனை காவலில் எடுக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதே போன்று மார்க்கண்டேயன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி சுமதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி நீதிமன்றம் அழைத்து வரப்பட்டு நீதிபதி முன் ஆஜர் ஆனார். ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் அவரது ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ததால் மீண்டும் அவர் பாளையங்கோட்டை சிறைக்கே அழைத்து செல்லப்பட்டார்.

DMK MLA Markandeyan Vilathikulam Police petition Thoothukudi

எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது

விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தூத்துக்குடியில் திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். மேலும், சட்டசபையின் கதவை மூடுவோம் என்று சொல்கிறார். அப்படி மூடினால், எலும்புகளை உடைத்துவிடுவோம் என மிரட்டும் தொனியில் பேசியிருந்தார். அவரது பேச்சு குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தவெகவினர் இது தொடர்பாக விளாத்திக்குளம் போலீசில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த விளாத்திக்குளம் போலீசார் நேற்று முன் தினம் அதிகாலையில் அவரை வீட்டிற்கே சென்று கைது செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சிறையில் மார்க்கண்டேயன் அடைக்கப்பட்டுள்ளார்.

காவலில் எடுக்க போலீசார் மனு

இதற்கிடையே தனக்கு ஜாமீன் வழங்க கோரி மார்க்கண்டேயன் தரப்பில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே காவல்துறை சார்பிலும், நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதாவது திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

தள்ளுபடி செய்த நீதிமன்றம்

இந்த நிலையில் மதியம் 2 மணியளவில் இரு வழக்குகளும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மார்க்கண்டேயன் போலீஸ் பாதுகாப்புடன் வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, காவல்துறை மற்றும் மார்க்கண்டேயன் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டார்.

சுமார் 20 நிமிடங்கள் விசாரணை நடந்த நிலையில், மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பின்னர் போலீசாரின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் மீண்டும் நெல்லை பாளையங்கோட்டை சிறைக்கே எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அழைத்து செல்லப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+