மோடிக்கு எதிராக கருப்பு கொடியுடன் குதித்த காங்கிரசார்.. பரபர நெல்லை, தூத்துக்குடி! கைது செய்த போலீஸ்
தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து உள்ளார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தந்து இருக்கிறார். நேற்று மாலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை புறப்பட்ட மோடி அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பின்னர் மீனாட்சியம்மன் கோயில் சாமி தரிசனம் செய்தார். இதனை அடுத்து இன்று தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார்.

குறிப்பாக குலசேகரன்பட்டினத்தில் புதிதாக அமைக்கப்படும் ராக்கெட் ஏவுதள பணிக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல் துத்துக்குடி வ.உ.சி. துறைமுக விரிவாக்க திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தூத்துக்குடி மற்றும் நெல்லையில் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை வெளியிட்ட அறிவிப்பில், "இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்க தவறிய ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, ஈ.வெ.கி.ச. இளங்கோவன், எம்.எல்.ஏ., சு.திருநாவுக்கரசர், எம்.பி., எம். கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் புதன்கிழமை காலை 10.30 மணியளவில் கடற்கரை சாலையில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும்.
சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சிவராஜசேகரன், எம்.சி., எம்.எஸ். திரவியம், எம்.சி., ஜெ. டில்லிபாபு, எம்.சி., எம்.பி. ரஞ்சன்குமார், திரு. எம்.ஏ. முத்தழகன், திரு. அடையாறு த. துரை ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்துவார்கள். இதில் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள், மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பார்கள்." என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications