"செட்டப்.. பூரா செட்டப்.. ஸ்டாலினால் நிறைய பேர் நொந்து போய்ட்டாங்க".. போட்டு தாக்கும் கடம்பூர் ராஜு

அமைச்சர் கடம்பூர் ராஜு ஸ்டாலினை விமர்சித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: ஸ்டாலின் ஒரு "ரீல்" என்றால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி "ரியல்" என்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் ரூ.31 கோடி மதிப்பீட்டில் 40.52 கிலோ மீட்டர் தூரம் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் தொடக்க விழா நடந்தது. இதில், அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார்.. பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அமைச்சர் சொன்னதாவது:

"முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தார்.. இப்போது விவசாயிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 12,110 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்துள்ளார்.

 அரசியல்

அரசியல்

ஆனால் நாங்கள் சொல்வதை அதிமுக அரசு செய்கிறது என்று சொல்லி, இதையும் எதிர்க்கட்சி தலைவர் அரசியலாக்க பார்க்கிறார். எதிர்க்கட்சி தலைவர் என்றால், மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை எடுத்துரைப்பதுதான் கடமை.. நல்ல கருத்துக்களாக இருந்தால், அதை அதிமுக அரசு ஏற்று கொள்கிறது என்பதை ஸ்டாலின் ஒத்து கொள்கிறார் என்றே அர்த்தம்..

 முதல்வர்

முதல்வர்

இப்படி ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து செய்து வருகிறார் முதல்வர்.. எல்லாருக்கும் கொரோனா காலத்தில் முதல்வர் நிவாரணம் வழங்கினார்.. மாணவர்களுக்கு என்ன நிவாரணம் வழங்கலாம் என்று யோசித்தார், உடனே மாணவர்கள் அனைவரையும் ஆல் பாஸ் செய்து உத்தரவிட்டார்.. இப்போது மாணவர்களின் ஹீரோவாக முதல்வர் விளங்குகிறார்.

வாக்குறுதி

வாக்குறுதி

குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள் என்று "திருவிளையாடல்" படத்தில் ஒரு டயலாக் வருமே.. அதை போலத்தான் ஸ்டாலின் பேசி வருகிறார்.. முக ஸ்டாலினால் திமுகவில் நிறைய பேர் நொந்து போய் உள்ளனர்.. தேர்தல் வாக்குறுதியில், 2 ஏக்கர் நிலம் தருவதாக திமுகவினர் அன்னைக்கு சொன்னாங்களே, அதை எந்த ஊரில்? எந்த நாட்டில் தந்தார்கள்?

 ரீல் - ரியல்

ரீல் - ரியல்

சொன்ன வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றி உள்ளதால், ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்ற பயத்தில் ஸ்டாலின் உளறி கொண்டே இருக்கிறார்... அவர் பேச்சில் தெளிவே இல்லை. "உங்கள் தொகுதியின் ஸ்டாலின்" நிகழ்ச்சியில் ஒரே செட்டப்தான்.. திமுகவினர் செட்டப் செய்து ஆட்களை பேச வைத்து வருகின்றனர்.. இப்படியே செட்டப் செய்து ஸ்டாலின் நாடகம் நடத்த வேண்டியதுதான்.. அதனால்தான் சொல்கிறேன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி "ரியல்" - எதிர்க்கட்சி தலைவர் "ரீல்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+