ஓபிஎஸ்- ஈபிஎஸ் அனுமதியை பெற்று விரைவில் விரிவான பிரஸ் மீட் நடத்துவேன்.. எஸ்பி வேலுமணி பரபரப்பு தகவல்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: அதிமுக தலைவர்களின் அனுமதியைப் பெற்று பத்திரிகையாளர்களை விரைவில் சந்திப்பேன் என தூத்துக்குடி விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேட்டி அளித்துள்ளார்.

முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், வீடுகள், அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் என 60-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

பல இடங்களில் ஹார்டு டிஸ்க்குகள், முக்கிய ஆவணங்கள், ரொக்கப்பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

விமான டிக்கெட்

விமான டிக்கெட்

இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து தனது மகன் விவேக் உடன் விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள கோவிலுக்கு சென்றதாக தெரிகிறது. காலை விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியேறிய நிலையில் மீண்டும் அவர் சென்னை செல்வதற்கான விமான டிக்கெட் மாலையில் போடப்பட்டிருந்தது.

தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி

தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி

இதையடுத்து தூத்துக்குடி விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நேற்று மாலையே தூத்துக்குடி வந்து தங்கிவிட்டு இங்கு உள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதாக திட்டமிட்டிருந்தேன். நேற்று சூழ்நிலை காரணமாக வர முடியாத நிலையில் இன்று கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்புகிறேன்.

விரைவில் பிரஸ் மீட்

விரைவில் பிரஸ் மீட்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து உள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தலைவர்களின் அனுமதியைப் பெற்று விரைவில் விரிவான பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவேன் என்றார்.

முறைகேடு புகார்

முறைகேடு புகார்

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கடந்த அதிமுக ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த போது 2014 முதல் 2018 ஆம் ஆண்டு கால கட்டத்தில் சென்னை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் திட்டபணிகளுக்காக ஒப்பந்தங்கள் போட்டதில் ரூ 811 கோடி முறைகேடு செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை என எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் தெரிவித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+