• search
தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என் மனைவிக்கு பாலியல் தொல்லை.. பாஜக நிர்வாகி பொன் பால கணபதி மீது சசிகலா புஷ்பாவின் கணவர் புகார்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: பாஜக மாநில துணைத் தலைவரும் முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பா மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக பொதுச் செயலாளர் பொன் பால கணபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

தியாகி இம்மானுவேல் சேகரனின் 65 ஆவது நினைவு தினம் கடந்த 11 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்த இருந்தனர்.

இந்த விழாவில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டன. பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, மாநில செயலாளர் அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது பாஜக நிர்வாகி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோ வைரலானது.

பாருங்க நம்ம மனுஷங்க பண்ண வேலைய.. செவ்வாய் கிரகத்தையும் குப்பையாக்கிட்டாங்க பாஸ்.. 7 ஆயிரம் கிலோவாம் பாருங்க நம்ம மனுஷங்க பண்ண வேலைய.. செவ்வாய் கிரகத்தையும் குப்பையாக்கிட்டாங்க பாஸ்.. 7 ஆயிரம் கிலோவாம்

சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பா

அந்த கூட்டத்தில் சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்த வந்தார். அவருக்கு பின்னால் பொன் பாலகணபதியும் வந்தார். அவர் அஞ்சலி செலுத்துவது போல் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சசிகலா புஷ்பாவின் முடியை பிடித்து இழுத்தபடியே உரசி கொண்டே முன்னால் வந்தார்.

சசிகலா புஷ்பாவிடம் சீண்டல்

சசிகலா புஷ்பாவிடம் சீண்டல்

அப்போது சசிகலா புஷ்பாவின் இடுப்பில் கை வைத்தார். அப்போது சுதாரித்த சசிகலா புஷ்பா பாலகணபதியின் கையை தள்ளி தள்ளி விட்டார். சசிகலா புஷ்பாவின் மார்பின் மீது உரசியபடியே கையை நீட்டி யாரிடமோ எதையோ கூறினார். அப்போதும் சசிகலா புஷ்பா தன் மீது அவரது கை படாதவாறு காத்துக் கொண்டார். இப்படி பல்வேறு சங்கடங்களால் சசிகலா புஷ்பா நெளிந்த போதிலும் அதுகுறித்து எதையுமே கண்டுக்காமல் இருந்தார் பால கணபதி. ஒவ்வொரு முறையும் பாலியல் சீண்டலின் போதும் சசிகலா புஷ்பா, பால கணபதியை முறைப்பதும், அதை அவர் கண்டு கொள்ளாமல் அடுத்தடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவதுமாக இருந்தார்.

புகார்

புகார்

இந்த வீடியோவை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் டிரோல் செய்தன. இந்த நிலையில் தன் மனைவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாஜக நிர்வாகி பொன் பால கணபதி மீது சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணனிடம் மின்னஞ்சல் மூலமாக புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தன் மனைவி சசிகலா புஷ்பா மீது பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த பொன் பால கணபதியை கைது செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

 முதல் கணவருடன் விவாகரத்து

முதல் கணவருடன் விவாகரத்து

சசிகலா புஷ்பா தனது முதல் கணவர் லிங்கேஸ்வர திலகனை விவாகரத்து செய்துவிட்டார். இதையடுத்து 2018 ஆம் ஆண்டு வழக்கறிஞரும் ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான ராமசாமி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக தகவல்கள் வெளியாகின. இதை அறிந்த ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா இந்த திருமணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் சசிகலா புஷ்பாவை திருமணம் செய்ய ராமசாமிக்கு தடை விதித்தது. எனினும் மதுரை குடும்ப நல நீதிமன்றத்தின் தடையை மீறி ராமசாமி- சசிகலா புஷ்பா திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

English summary
Ex MP Sasikala Pushpa husband Ramasamy gives complaint about BJP Activist Pon Bala Ganapathy on his sexually assault action.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X