திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்! திருத்தணியை தவிர 5 படை வீடுகளிலும் நிகழ்வு!

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவில் இன்று மாலை 4 மணிக்குமுக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி பக்தர்கள் கடற்கரை அருகே குவிந்து வருகிறார்கள்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது கந்த சஷ்டி விழா. இந்த விழா கடந்த 10ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

soorasamharam

இதையடுத்து 6 நாட்களுக்கு திரளான பக்தர்கள் தங்கியிருந்து விரதம் இருந்து வருகிறார்கள். விழா நாட்களில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜை, சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

இரவில் சுவாமி ஜெயந்திநாதர்,வள்ளி தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் கிரிப்பிரகாரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது.

இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாம்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.

4 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும். பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது.

இதையடுத்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் கிரிப்பிரகாரத்தில் உலா வந்து கோவிலை வந்தடைவார். அங்கு சாயாபிஷேகம் நடைபெறுகிறது.

விழாவையொட்டி கோயிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரை சேர்ந்த பக்தர்களும் குவிந்து வருகிறார்கள். மேலும் கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக கூடாரங்களில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களும் முருகனை வழிபட்டு வருகிறார்கள்.

சூரசம்ஹாரத்தை காண வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து அதில் இருந்தவாறே போலீஸார் கண்காணிக்கிறார்கள். கோயில் வளாகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

7ஆம் நாளான நாளை இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு செய்து வருகிறது.

முருகனின் அறுபடை வீடுகளில் திருத்தணியை தவிர மற்ற 5 படைவீடுகளிலும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. திருத்தணியில் முருகன் கோபம் தணிந்து அமர்ந்ததால் அங்கு சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. அதற்கு பதிலாக புஷ்பாஞ்சலி நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+