எமோஷனல் ஆயிட்டாங்க கீதா ஜீவன்.. ஸ்டாலின் கண் அசைவு போதுமே.. திமுக சொன்னதுமே, பாய்ந்த வந்த "தம்பிகள்"
தூத்துக்குடி: "அரைவேக்காட்டுத்தனமாக சீமான் பேசக்கூடாது.. அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒரு தலைவராக சீமான் தெரிகிறார்.. எங்கள் தலைவரின் கண் அசைவிற்காக காத்திருக்கிறோம்.. முதலமைச்சராக ஸ்டாலின் இருப்பதாலேயே, நாங்கள் பொறுமையாக இருக்கின்றோம்" என்று அமைச்சர் கீதா ஜீவன் காட்டமாக கூறியிருக்கிறார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி, டூவிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்தார்.

"நாம் தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் சீமான் கலைஞரை பற்றி இழிவாகவும், அவதூராகவும் பேசியதை திமுக வன்மையாக கண்டிக்கிறது... தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக தமிழக மக்களின் வளர்ச்சிக்காக, தமிழ் மொழி வளர்ச்சிக்காக கலைஞர் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்தவர்.. மாற்றுத்திறனாளி, திருநங்கைகள், மகளிர், தொழிலாளர்கள் என அனைவர் வாழ்க்கையிலும் உரிமையை நிலைநாட்டியவர் கலைஞர் கருணாநிதி.
திமுக கண்டனம்: கலைஞர் பற்றி இழிவாக பேசுவது வன்மையாக திராவிட முன்னேற்றக் கழகம் கண்டிக்கிறது... கலைஞர் இறக்கும் போது சீமான் அவரை பற்றி புகழ்ந்தார்.. ஆனால் இப்போது தேவையில்லாமல் அவரை இகழ்ந்து பேசி வருகிறார்..
சாட்டை துரைமுருகன் என்ற ஒருத்தர் ஜாதி பெயரை சொல்லி இழிவாக பேசுகிறார்.. திருச்சி ஐடி பிரிவை சேர்ந்தவர் தந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. அப்படியிருக்கும்போது, கருத்துரிமை இதில் பறிக்கப்படுவதாக சீமான் எப்படி சொல்கிறார்?
தெலுங்கர்: கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தேவன் பிள்ளை இல்லை என்றும், சாத்தான் பிள்ளைகள் என்றும் சொன்னவர் சீமான்தான்.. தூய்மை பணியாளர்களை "தெலுங்கர்" என்று சொன்னதும் சீமான்தான். சாதி, மத ரீதியாக பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியான கருத்துக்களை பேசி வருவது சீமான்தான்.
சீமான் தன்னுடைய சோதித்து கொள்ள வேண்டும்... பெண் காவலர்களையும், உயர் அதிகாரிகளின் தவறான முறையில் பேசிய ஒருவருக்காக (சவுக்கு சங்கர்), பெண் காவலர்கள் புகார் தந்திருக்கிறார்கள். அது தொடர்பான வழக்கு தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.. அப்படியானால், பெண் போலீஸை தவறாக சொன்னவர்களை சீமான் ஏற்றுக்கொள்கின்றாரா?
திமுக கட்டுப்பாடு: தனிப்பட்ட முறையில் தவறான சொற்களை உபயோகப்படுத்தி பேசி பிரச்சனை உண்டாகி, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துகின்றார் சீமான்.. இதனை ஏற்க முடியாது.. எங்கள் தலைவர் பொறுப்பான முதல்வர், கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்தி, கட்டுப்பாட்டோடு திராவிட முன்னேற்ற கழகத்தில் இருக்கின்றார்கள்...
சீமான் அவருடைய கட்சிக்கு இலங்கை தமிழர் பிரச்சனையை முன்னிறுத்தி உலக அளவில் பல்வேறு வகையில் நன்கொடையாக பெற்று வருகிறார்.. இலங்கையில் எப்படி ராஜபக்சேயை எதிர்க்கின்றானரோ அதே போல, தமிழகத்தில் திமுகவை எதிர்க்க வேண்டும் என்று காட்டி கொள்வதற்காக திமுகவையும், திமுக தலைவர்களையும் அவதூறாக பேசி வருகிறார். சீமான் மீது புகார் அளித்தல் நடவடிக்கை எடுப்போம்
முதிர்ச்சி: நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும். அரசியல அரைவேக்காடு தனமாக பேசக்கூடாது.. அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒரு தலைவராக அவர் காணப்படுகிறார். தமிழ் சமூகத்தை தவறான தகவல் மூலம் தவறாக வழிநடத்தி வருகிறார். அடுக்குமொழியில் பேசி தமிழ் தமிழ் சமூகத்தை சீமான் தவறாக வழிநடத்துகிறார்... கருத்துரிமை என்கிற பெயரில் உண்மைக்கு புறம்பாக பேசுவதை ஏற்க முடியாது.
பச்சோந்தி போல இன்னைக்கு ஒன்று, நாளைக்கு ஒன்று என்று பேசுகிறார்.. தான் பேசியது என்னவென்று தெரியாமலேயே பேசி வருகிறார். எனவே, அரசியல் தலைவருக்கு அவர் தகுதியானவர் கிடையாது.. அரசியல் பண்பற்றவர்.. தரமில்லாத ஒரு அரசியல் நடத்தி வருகிறார்..
கண் அசைவு: எங்கள் தலைவரை பற்றி பேசுவதற்கு சீமானுக்கு அருகதை இல்லை. கோடான கோடி தொண்டர்கள், தலைவரின் கண் அசைவிற்காக காத்திருக்கின்றார்கள்.. நாங்கள் பொறுமையாக இருக்கின்றோம்... முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கின்றார்.. அதற்காகவே நாங்கள் பொறுமையாக இருக்கின்றோம்" என்றார் கீதாஜீவன்.
அமைச்சர் கீதா ஜீவனின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. அமைச்சரின் இந்த பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியினர் பதிலடி தந்து வருகிறார்கள்.. "திமுக அதிமுக கட்சிகளுக்கு சீமானை பற்றி பேச தகுதியே இல்லை.. திமுகவுக்கு தைரியம் இருந்தால் வழக்கு போட்டு உள்ளே போட வேண்டியதுதானே" என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பதிலடி: மேலும் சிலரோ, "கருணாநிதி சட்டமன்றத்தில் பேசியதை விடவும், இந்திரா காந்தியை பேசியதை விடவும் சீமான் ஒன்றும் கேவலமாக பேசிவிடவில்லை.. இந்திய அரசாங்கத்திடம்தானே வருமான வரித்துறை உள்ளது? தமிழ்நாடு அரசிடம்தானே வருவாய்த்துறை உள்ளது? சீமான் வீடு மற்றும் கட்சியில் சோதனை போட வேண்டியதுதானே? என்று கேள்வி எழுப்பியும் வருகிறார்கள். இதனால், திமுக - நாம் தமிழர் கட்சியினரிடையே மீண்டும் கருத்து மோதல்கள் வெடித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications