சுடச் சுட டீ.. பார்த்து பார்த்து வாங்கிய உருளைக் கிழங்கு.. தூத்துக்குடியை கலக்கும் தமிழிசை
தூத்துக்குடி காய்கறி சந்தையில் தமிழிசை சவுந்தராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
Recommended Video

சென்னை: இனிமே தமிழிசைக்கு காய்கறி எல்லாம் தூத்துக்குடி சந்தையில இருந்துதான் ஸ்டிரைட்டா போக போகிறது போல! பக்கெட் நிறைய உருளைக்கிழங்கை வாங்கி கொண்டிருக்கிறார்!
தூத்துக்குடியில் எம்பி கனிமொழிக்கு எதிராக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனை பாஜக களம் இறக்கி இருக்கிறது.
எதற்காக தமிழிசையை இங்க கொண்டு போய் பாஜக நிறுத்தி உள்ளதோ தெரியவில்லை. ஆனால் செல்லும் இடமெல்லாம் பாஜக மீதான கோபத்தை தமிழிசையிடம் தொகுதி மக்கள் காட்டவில்லை.. காட்டவும் முடியாது! அதுதான் தமிழிசை!
எளிமையாகவும், அன்பாகவும் பழகி வரும் தமிழிசை தொகுதி மக்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து வருகிறார்!

கேஷூவல் தமிழிசை
தினம் ஒரு இடத்துக்கு தமிழிசை சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அப்படித்தான் இன்று தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டார். ஏற்கனவே மார்கெட்டில் கூட்டம் நெருக்கி தள்ளும். இப்போது தமிழிசை செல்லவும், முண்டியடித்து வர ஆரம்பித்துவிட்டனர். ஆனால் எதை பற்றியும் கவலைப்படாத தமிழிசையோ, கேஷூவலாக காய்கறி வாங்கி கொண்டிருந்தார்.
லோக்சபா தேர்தலில் மகுடம் சூட போவது யார்? மக்கள் கணிப்பே வேறுதான்!
|
தக்காளிப்பழம்
ஒரு பெரிய பக்கெட் நிறைய உருளைக்கிழங்கை எடுத்து ஒரு பைக்குள் கொட்டுகிறார். இதுபோலவே ஒரு பையில் தக்காளி பழத்தை கொட்டி கொள்கிறார். ஒவ்வொரு காய்கறியையும் பார்த்து பார்த்து வாங்குகிறார். "இன்று தூத்துக்குடி காய்கறி சந்தைக்கு சென்றபோது வியாபார சகோதரர்களின் அன்பான வரவேற்பும்... வாழ்த்துக்களும்..." என்று தனது ட்விட்டரில் இதை பதிவிட்டுள்ளார்.
|
சந்தையில் தாமரை
"இன்று தூத்துக்குடி காய்கறி சந்தைக்கு சென்று காய்கறி வாங்கியபோது..." என்று மற்றொரு ட்வீட் போட்டுள்ளார். இதற்கு பிறகு ஒரு பூ மார்க்கெட் செல்கிறார். எங்கிருந்துதான் கொண்டு வந்தார்களோ தெரியவில்லை.. திடீரென ஒருவர் தாமரைபூவை தமிழிசைக்கு தருகிறார்.
|
தூய்மை இந்தியா
திடீரென்று மோடியின் ஸ்வச் பாரத் ஞாபகம் வந்துவிட்டது போல இருக்கிறது. ஒரு துடைப்பத்தை எடுத்து மார்க்கெட்டில் பெருக்க ஆரம்பித்துவிட்டார் தமிழிசை. "நம் பாரதப்பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்பட்ட தூய்மையே உண்மையான சேவை திட்டத்தின்கீழ் இன்று தூத்துக்குடியில் இச்சேவையில் பணியாற்றும் சகோதரிகளுடன்..." என்று போட்டோ போட்டு பதிவிட்டுள்ளார்.
|
டீக்கடை
இவ்வளவும் செய்து முடித்த தமிழிசை கடைசியாக மார்க்கெட்டில் இருந்த ஒரு டீக்கடையில் டீ சாப்பிட செல்கிறார். ஒரு சில்வர் டம்பளரில் டீ தருகிறார்கள். (பிளாஸ்டிக் இல்லை) டீ கடைக்கு வெளியில் நின்றபடியே அதை ஊதி ஊதி குடிக்கிறார் தமிழிசை!
எளிமையாகவும், அன்பாகவும் பழகி வரும் தமிழிசை தொகுதி மக்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து வருகிறார்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications