தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எனக்கு மிரட்டி பழக்கமில்லை.. திரட்டித்தான் பழக்கம்.. தமிழிசை ரைமிங் ஓகே.. பட் டைமிங் மிஸ்ஸிங்!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி : எனக்கு யாரையும் மிரட்டி பழக்கமில்லை. மக்களின் ஆதரவை திரட்டித்தான் பழக்கம் என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதில் அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற கட்சிகள் தோல்வியை சந்தித்தன.

இதில் பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து தமிழிசை களமிறக்கப்பட்டார்.

கிராம சபையில உட்கார்ந்து, டீ குடிச்சு, ஜீன்ஸ் போட்டு.. ஜிம்முக்கு போய்..ஸ்டாலின் மீது பாய்ந்த சீமான்கிராம சபையில உட்கார்ந்து, டீ குடிச்சு, ஜீன்ஸ் போட்டு.. ஜிம்முக்கு போய்..ஸ்டாலின் மீது பாய்ந்த சீமான்

தமிழிசை

தமிழிசை

2ஜி வழக்கை மேற்கோள்காட்டி கனிமொழிக்கு எதிராக எத்தனையோ பிரச்சாரங்களை தமிழிசை செய்தார். ஆனால் ஒன்றும் பயனில்லை. இந்த நிலையில் தேர்தல் முடிவுகளின் போது தனது தோல்வி குறித்து தமிழிசை பேட்டி அளித்தார்.

பாஜகவுக்கு வாக்கு

பாஜகவுக்கு வாக்கு

அப்போது அவர் கூறுகையில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் தொங்கு நாடாளுமன்றம் அமையாமல் தங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்காதது வருத்தம்தான்.

குற்றச்சாட்டுகள்

குற்றச்சாட்டுகள்

ஆனால் பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்பதை நினைத்து தமிழக மக்கள் வருந்துவார்கள் என்று தமிழிசை தெரிவித்தார். தமிழக மக்களை தமிழிசை மிரட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கனிமொழி

கனிமொழி

இந்த நிலையில் இவர் சொல்லி ஒரு வாரத்துக்கு மேல் ஆன நிலையில் தமிழிசை இதுகுறித்து பரபரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். அவர் கூறுகையில் கோவில்பட்டி டாஸ்மாக் கடையை மூட கோரி கனிமொழி ஆட்சியரிடம் மனு தந்துள்ளார்.

திரித்து கூறும் கட்சிகள்

திரித்து கூறும் கட்சிகள்

அது போல் தமிழகத்தில் லாப நோக்கம் பார்க்காமல் திமுகவினர் தங்களது மதுபான ஆலைகளை மூடவேண்டும். தவறானவர்களுக்கு வாக்களித்து விட்டதாக வருத்தப்படுவார்கள் என கூறியதை திரித்து கூறுகிறார்கள்.

மிரட்டவில்லை

மிரட்டவில்லை

நான் யாரையும் மிரட்டி பழக்கப்பட்டவள் அல்ல; மக்களின் ஆதரவை திரட்டி தான் பழக்கம் என கூறியுள்ளார். மிரட்டி.. திரட்டி... என ரைமிங்காக தமிழிசை கூறினாலும் ஒரு வாரம் கழித்து விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilisai Soundararajan explains why she says TN people would feel sad for not voting BJP. She didnt know how to threaten the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X