Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. அப்படி துடித்ததே திமுக.. உத்தரவிட்ட துணை தாசில்தாருக்கு பதவி உயர்வு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட அரசு அதிகாரி கண்ணனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. துணை வட்டாட்சியர் பதவியிலிருந்த கண்ணனுக்கு தற்காலிக வட்டாட்சியராக பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்துவரும் நிலையில் இப்போது பதவி உயர்வு கொடுத்தும் கவுரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை மிகப்பெரிய அளவில் செயல்பட்டு வந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் , வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து தான் தாமிரம் சென்றது. இந்நிலையில் தாமிர உருக்கு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு கட்டத்தில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு போராட்டத்தில் இறங்கினார்.

tuticorin sterlite government employee

100 நாட்கள் வரை இந்த போராட்டம் நடந்தது. கடந்த 2018ம் ஆண்டு மே 22-ம் தேதி 100 வது நாள் போராட்டத்தின் போது பொதுமக்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இந்த போராட்டத்தை தடுக்க களம் இறங்கிய போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின்னர் கைலப்பு ஏற்பட்டதால் வன்முறை வெடித்தது. இதையடுத்து தடியடி நடத்திய கூட்டத்தை கலைக்க முயன்ற போலீசார், திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனால் மொத்த தூத்துக்குடியிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு இந்த விவகாரம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து 2018ம் ஆண்டு மே 26ம் தேதி அன்று உடனடியாக ஆலை சீல் வைத்து மூடப்பட்டது.

அத்துடன் ஆட்சிக்கே நெருக்கடி ஏற்படும் அளவிற்கு நிலைமை சென்றதால், விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்திட, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணை ஆணையத்தின் முழுமையான விசாரணை அறிக்கை கடந்த 2022, மே 18-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் மிக முக்கியமான இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது "யாருடைய உத்தரவும், தூண்டுதலுமின்றி துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது தமிழ்நாடு இதுவரையிலும் கண்டிராத மிக மோசமான காவல்துறை நடவடிக்கை. அப்போது பொறுப்பு வகித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி கபில்குமார் சரட்கார், தூத்துக்குடி எஸ்.பி. மகேந்திரன், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 17 பேர்தான் இதற்கு முழுப்பொறுப்பு. குருவிகள் சுடப்படுவதைப் போல மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்." என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு உறுதி அளித்தார். ஆனால் இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதில், தென் மண்டல ஐ.ஜியாக இருந்த சைலேஷ்குமார் யாதவ்விற்கு டி.ஜி.பியாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது. துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட 3 வருவாய்த்துறை அலுவலர்களில் ஒருவரான கண்ணன் என்பவருக்கு துணை வட்டாட்ச்சியர் பதவியில் இருந்து தற்காலிக வட்டாட்சியராக பதவி உயர்வு அளித்திருப்பது,ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் ஸ்டெர்லைட் வழக்கில் குற்றம்சாட்டவர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் பதவி உயர்வினை அரசு வழங்கி உள்ளதாக அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+