நடுங்க வைத்த சித்ரா.. காதலனுடன் சேர்ந்து கள்ளக்காதலன் தலையை துண்டாக வெட்டிய கொடூரம்.. 2 பேர் கைது!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து காதலனை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: கணவனை துரோகம் செய்த சித்ரா, காதலனுக்கும், அதன்பிறகு கள்ளக்காதலனுக்கும் துரோகம் செய்து, கடைசியில் இந்த உறவு ஒரு கொலை வரை நடந்து முடிந்துள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜபாண்டி. கல்யாணமாகி 2 மனைவிகள், 2 குழந்தைகள் உள்ள நிலையில் 3-வதாக ஒரு பெண்ணுடன் உறவு வைத்திருந்தார்.

ஆனாலும், சித்ரா என்ற பெண்ணுடனும் 4-வதாக உறவு ஆரம்பமானது. இந்த பெண் திருட்டு வேலை செய்பவர்.. அதாவது கார் கொள்ளைகளுக்கு துப்பு தருபவராம். இந்நிலையில், தட்டப்பாறை அருகே உள்ள கல்குவாரி குட்டையில் ராஜபாண்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. நிர்வாண நிலையிலும், அழுகியும் சடலம் இருந்தது.
இது சம்பந்தமாக போலீசார் விசாரணையில் இறங்கினர்.

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

அப்போதுதான் சித்ராவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். சித்ரா பற்றின தகவல்களை கேட்டு போலீசாரே ஆடிப்போய்விட்டனர். விசாரணையில் தெரிய வந்ததாவது: 20 வயது சித்ராவுக்கு 2 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணமாகி உள்ளது. ஆனால், கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்து, அம்மா வீட்டிலேயே வந்து தங்கி உள்ளார். அப்போது, வீட்டுக்கு, சித்தப்பாவின் நண்பரான ராஜபாண்டி அடிக்கடி வந்து செல்லவும், காதல் பற்றி கொண்டது.

ராஜபாண்டி

ராஜபாண்டி

ராஜபாண்டி, சித்ராவுக்கு தூத்துக்குடி அருகே புதியம்புத்தூரில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்து ஒரு வீட்டை தனியாக பார்த்து குடித்தனமும் செய்து வந்திருக்கிறார். இந்த சமயத்தில் ராஜபாண்டியை சந்திக்க, மற்ற கூட்டாளிகள் ராமர், சக்திவேல் போன்றோர் அந்த தனிக்குடித்தன வீட்டுக்கு வந்து போயுள்ளனர்.

கொலை

கொலை

இதில் சக்திவேலுவை காதலிக்க ஆரம்பித்துவிட்டார் சித்ரா. விஷயம் ராஜபாண்டியனுக்கு தெரியவர, சித்ராவுக்கு தினமும் சரமாரி அடி விழுந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த, சித்ரா, சக்திவேலிடம், ராஜபாண்டியனை கொலை செய்துவிடலாம், அப்போதுதான் நாம் நிம்மதியாக வாழ முடியும் என்று சொல்லி உள்ளார்.

அரிவாள்

அரிவாள்

சம்பவத்தன்று, ராமர், சக்திவேல் ஆகியோருடன் சித்ரா வீட்டில் இருப்பதை ராஜபாண்டி பார்த்ததும், தகராறு ஆரம்பமானது. ஒருகட்டத்தில் சக்திவேலை அரிவாள் கொண்டு வெட்ட ராஜபாண்டி முயல, ஆத்திரம் அடைந்த சித்ரா, சக்திவேல், ராமர் உதவியுடன் மடக்கி பிடித்து, அரிவாளை பிடுங்கி, ராஜபாண்டியின் தலையை துண்டாக அறுத்ததாக சொல்லப்படுகிறது.

கைது

கைது

பின்னர், தனியாக கீழே விழுந்த தலையை ஒரு பையில் சுற்றி எடுத்து கொண்டு, புதியம்புத்தூரில் உள்ள கிணற்றிலும், வெறும் முண்டத்தை கீழத்தட்டப்பாறை பகுதியிலுள்ள கல் குவாரியிலும் வீசியுள்ளனர் என தெரியவந்தது. இவ்வளவும் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, ராமர், சித்ராவை கைது செய்ததுடன், தப்பி ஓடிய புதுக்காதலன் சக்திவேலையும் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+