திருச்செந்தூர் பக்தர்களுக்கு தடை! தூத்துக்குடியை துவட்டும் மழை! துண்டான சாலைகள்.. தவிக்கும் மக்கள்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இன்றும் நாளையும் வெளியூரிலிருந்து பொதுமக்கள் வருவதைத் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று கடற்கரையை நெருங்கி உள்ளதை அடுத்து, தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.

குறிப்பாக நெல்லை, தென்காசி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது .தாழ்வான இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது தொடர்ந்து வலுவிழக்கும் நிலையில் 48 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் தொடர் கன மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்து வருவதால் பல பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகரப் பகுதிகள், ராஜீவ் காந்தி நகர், ராம்நகர், தபால் தந்தி காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும் திருநெல்வேலி மற்றும் மருதூர் அணைக்கட்டிலிருந்து சுமார் 61 ஆயிரம் கன அடி நீரும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 54,000 கன அடி நீரும் உப்பாற்று ஓடையில் சுமார் 11 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கனமழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் செல்வதால் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையும் திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும், ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையிலும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. எனவே மழை மற்றும் வெள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் கோவிலுக்கு இன்று நாளையும் (14, 15-12-2024) வெளியூரில் இருந்து பொதுமக்கள் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் தலைவர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே புயல் சின்னம் உருவானபோது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிலை ஒட்டிய கடல் பகுதிகள் சுமார் 100 அடி தூரத்திற்கு உள் வாங்கியது. இதை அடுத்து ஆபத்தான முறையில் பொதுமக்கள் செல்பி எடுத்தனர். இதனால் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications