முழுசா மாறிய தெய்வானை யானை.. இவ்ளோ புத்திசாலித்தனமா? என்ன பண்ணுதுன்னு பாருங்க
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள தெய்வானை யானை வேப்பை இலையை எடுத்து அரிப்பு ஏற்பட்ட காலில் தேய்த்த வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. காலில் அரிப்பு ஏற்பட்டதும், அங்கு இருந்த வேப்ப மரம் ஒன்றின் கிளையை முறித்த யானை, வேப்ப இலையை காலில் தேய்த்தது. மருத்துவ குணம் நிறைந்த வேப்ப இலையை தனது காலில் யானை தேய்த்ததை அங்கிருந்த பக்தர்கள் வியப்புடன் பார்த்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த முருக பெருமான் கோவில் உலக புகழ் பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செல்வார்கள். முக்கியமான நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவது வழக்கம்.

தமிழ்நாடு மட்டும் இன்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் கூட இந்தக் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகிறார்கள். திருச்செந்தூர் கோவிலில் தெய்வானை என்ற 26 வயது பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை பராமரித்து வந்த பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன், யானை தாக்கியதில் உயிரிழந்தனர். செல்பி எடுத்ததால் மிரண்ட யானை சிசுபாலனை தாக்கியதாகவும் தடுக்க வந்த பாகனையும் கோபத்தில் தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
தெய்வானை யானை பாகன் உள்பட இருவரை கொன்றதையடுத்து தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டது. 11 நாட்களுக்கு பிறகு மற்ற பாகன்கள் உதவியுடன் யானை வெளியில் அழைத்து செல்லப்பட்டது. பாகனை கொன்றதால் மன அழுத்தத்துடன் காணப்பட்ட யானை பிறகு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது. தற்போது யானை இயல்பான நிலையில் உள்ள நிலையில், தனது வழக்கமான பணிகளை செய்து வருகிறது.
தெய்வானை யானையை வெளியில் அழைத்து செல்லும் போது அதற்கு காலில் அரிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு இருந்த வேப்ப மரம் ஒன்றின் கிளையை முறித்த யானை, வேப்ப இலையை காலில் தேய்த்தது. மருத்துவ குணம் நிறைந்த வேப்ப இலையை தனது காலில் யானை தேய்த்ததை அங்கிருந்த பக்தர்கள் வியப்புடன் பார்த்தனர்.
தெய்வானை யானைக்கு காலில் பூஞ்சை தொற்று உள்ளதால் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பூஞ்சை தொற்று குணம் ஆகி வரும் நிலையில் தான், காலில் ஏற்பட்ட அரிப்புக்க்கு சுயமாக மருத்துவம் செய்துள்ளது தெய்வானை. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்பொது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் யானை தெய்வானை தனக்குத்தானே மருத்துவம் பார்த்துக்கொண்டது அங்கு இருந்த பக்தர்களை வியப்படைய வைத்தது. காலில் அரிப்பு ஏற்பட்ட உடன் அங்கு இருந்த வேப்ப இலையை பறித்து காலில் தேய்த்ததையும், காலில் பூஞ்சை தொற்று உள்ள தெய்வானை யானை, மருத்துவ குணம் நிறைந்த வேப்ப இலையை காலில் தேய்த்து தனக்குத்தானே மருத்துவம் பார்த்ததாகவும் அங்கு வேடிக்கை பார்த்த பக்தர்கள் பேசிக்கொண்டனர்.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தெய்வானை யானை, இனி யாரையும் அடிக்க மாட்டேன் என பதில் சொல்வது போல பாகனின் கேள்விக்கு செல்லமாக தலையை ஆட்டி பதிலளித்தது பலரையும் ரசிக்க வைத்தது. கடந்த 6 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது. யானையை கால்நடை மருத்துவர்கள் பராமரித்துவிட்டு பின்னர் பழங்கள் கொடுத்தனர். அதை வாங்கி சாப்பிட்ட யானையிடம், பாகன் இனி யாரையும் அடிப்பியா? என செல்லமாக கேட்டார்.
இதற்கு பதிலளிப்பது போல உடனே தலையை ஆட்டி, அடிக்க மாட்டேன் என யானை சொல்வது போல இருந்தது. இந்தக் காட்சிகள்தான் வைரலாகின. யானையை அன்றைய தினம் ஆய்வு செய்த கால்நடை மருத்துவர்கள், தெய்வானை யானை, சகஜ நிலையில் இருப்பதாகவும் வழக்கம் போல நடைபயிற்சிக்கு அழைத்து செல்லலாம் எனவும் பரிந்துரைத்தனர். அதன்படி தற்போது தெய்வானை யானை நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டு இயல்பான நிலையில், உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications