திருமா பேசும் போதே.. படக்கென கட் ஆன கரண்ட்! பவர் கட்டால் அப்செட்டான சிறுத்தைகள்! அமைச்சர் எங்கே?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்ட நிகழ்வில் திடீர் மின்தடை ஏற்பட்டதால் அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து செல்போன் விளக்குகளை எரியவிட்டபடி கத்தி கூச்சலிட்டு அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனால் திட்டமிட்ட நேரத்துக்கு முன்னதாகவே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திருமாவளவன் புறப்பட்டுச் சென்றார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரமகேந்திரகோட்டை பகுதியில் ஊர் பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இணைந்து அமைத்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் பயிலரங்கத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

Thirumavalavan Power Cut VCK

இதில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு அம்பேத்கர் பயிலரங்கத்தை திறந்துவைத்தார். அப்போது நடைபெற்ற நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் மேடையில் ஏறி பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடையே கைகாட்டியபோது மின்சாரம் தடைபட்டது.

திருமாவளவன்

இதனால் தொண்டர்கள் கத்தி கூச்சலிட்டனர். தொடர்ந்து பொதுமக்களும் கட்சியினரும் செல்போன்களில் டார்ச் அடித்து தூக்கிப்பிடித்தவாறு கூச்சலிட்டனர். மின்தடையானது ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடித்ததால் விசிக தலைவர் திருமாவளவனும் கட்சியினரும் அதிருப்திக்குள்ளாகினர். தவெக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக புகார்கள் கூறப்படும் நிலையில் தவெக கூட்டணியிலுள்ள விசிக தலைவர் திருமாவளன் கலந்துகொண்ட நிகழ்விரல் மின்தடை ஏற்பட்டுள்ளது விசிகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மின்வெட்டு

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வீடுகளில் ஏசி, குளிர்பதன சாதனங்கள் மற்றும் மின்சார உபயோகங்கள் அதிகரித்துள்ளன. இந்த சூழலில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சென்னையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சில இடங்களில் இரண்டு மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை மின்வெட்டு நீடித்ததாக கூறப்படுகிறது.

மின்தடை

நீண்ட நேர மின்தடை ஏற்பட்டதை எதிர்த்து பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சாரவிநியோகத்தை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறுஉடனடி நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம்மேற்கொண்டுள்ளது.

மின்பற்றாக்குறை

இதன் காரணமாக மின்பற்றாக்குறை ஏதுமின்றி, தற்போது மாநிலம் முழுவதும் சீரான மற்றும்தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. மின் தொகுப்பு மற்றும் மின்விநியோக நிலைமையைதொடர்ந்து கண்காணிப்பதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியதலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு 24 மணிநேரமும் விழிப்புடன் கண்காணித்து, தேவையானநடவடிக்கைகள் மற்றும் உரிய உத்தரவுகளை உடனுக்குடன்வழங்கி வருகிறது என கூறியது மின்வாரியம்.

சிடிஆர் நிர்மல் குமார்

மின்வாரியம் விளக்கம் அளித்த அடுத்த நாளில் இருந்தே மீண்டும் மின்வெட்டு அதிகரித்து இருப்பதாக பொதுமக்களால் மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டப்படுகிறது. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் மின்வெட்டு பிரச்சனை மீண்டும் தலை தூக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால்மின் பிரச்சனையை சமாளிக்க வேண்டிய அமைச்சர் மின் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் மதுரையில் செட்டில் ஆகிவிட்டார் என சமூக வலைதளங்களில்அவரை வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+