மஞ்சள் டீசர்ட், கையில் துப்பாக்கி! தமிழகத்தை உலுக்கிய ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு! காவலர் ராஜா மரணம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், அந்த சம்பவத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட ஆயுதப்படை காவலர் ராஜா உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் அப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு நிலவுவதாக அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வந்தனர். இது கடந்த 2018ம் ஆண்டு போராட்டமாக மாறியது. அந்த ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.

Sterlite Thoothukudi protest

ஆலையால் தங்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி, 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி திரண்டு போராட்டம் நடத்தினர். ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது போலீசார் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த கொடூரத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

துப்பாக்கிச்சூடு நடைபெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் போட்டோக்களும் அப்போதே சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில் போலீஸ் வாகனத்தின் மேல்பகுதியில் நின்றிருந்த காவலர் ஒருவர் மஞ்சள், கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்தபடி துப்பாக்கியால் சுடுவது பதிவாகியிருந்தது. அந்த ஒரு போட்டோ ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது.

அந்த நபர் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த காவலர் ராஜா என்பது பின்னர் தெரியவந்தது. இந்த காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் ஏற்படுத்தின. பின்னர் துப்பாக்கி சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் நடத்திய விசாரணையிலும் அந்த போட்டோக்கள் முக்கிய ஆதாரமாக மாறியிருந்தது.

இந்த நிலையில், ராஜாவுக்கு சமீபத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை தூத்துக்குடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு இரவு அவர் உயிரிழந்தார். ராஜாவுக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான குற்றப்பத்திரிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காவலர் ராஜா உயிரிழந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+