உதய் vs புஸ்ஸி..சட்டசபையில் வெடித்த போர்! பாதிக்கப்பட்டதே நான் தான்! தூத்துக்குடி பெண் பகீர் பேட்டி!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தவெக பெண் நிர்வாகி கூட்டு பா**ல் வன்கொடுமை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது தவறு இல்லை என புலன் விசாரணையில் தெரியவந்திருப்பதாக அமைச்சர் சட்டமன்றத்தில் கூறினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், தான் அளித்த புகார் மனு தொடர்பாக தன்னிடம் எந்தவிதமான புலன் விசாரணையும் நடத்தப்படவில்லை எனவும், எந்த அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது தவறு இல்லை எனக் கூறுகிறார்கள்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டமன்ற கூட்டத்தில் கடந்த மூன்றாம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை இல்லை என குற்றம் சாட்டி பேசினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சரும் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளருமான புஸ்ஸி ஆனந்த், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீது எந்த தவறும் இல்லை என புலன் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தெரிவித்தார்.

Thoothukudi TVK MLA crime

தான் கொடுத்த புகார் மனு மீது எந்த புலன் விசாரணையும் தன்னிடம் செய்யவில்லை என்ற போது எந்த அடிப்படையில் அவர் மீது தவறில்லை என கூறுகிறார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் பேசுகையில்," கடந்த 3ஆம் தேதி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூட்டு பாலியல் வன் கொடுமை குறித்து விவாதம் செய்தார்கள். அதற்கு நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்திருந்தார். நான் மே 31ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் புகார் அளித்திருந்தேன். ஜூன் ஒன்றாம் தேதி குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இரண்டாம் தேதி அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினர் எனவும் பாதிக்கப்பட்ட என்னை தூத்துக்குடி பெண் எனவும் நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார். நான் கட்சியில் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளராக பதவியில் உள்ளேன். 160 ரூபாய் எனது சொந்த பணத்தை கட்டி பதவியில் உள்ளேன். பிறகு எப்படி தூத்துக்குடி பெண் என சொன்னார் என தெரியவில்லை. அவர் ஒருதலைபட்சமாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரை காப்பாற்றும் விதமாகவே பேசுகிறார்.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஒரு தவறும் செய்யவில்லை என அவர் தெரிவிக்கிறார். யாரை வைத்து புலன் விசாரணை செய்தீர்கள் என தெரியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்விக்கு பதில் அளித்தீர்கள் பாதிக்கப்பட்ட எனக்கு பதில் சொல்லுங்கள். முதல் தகவல் அறிக்கையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் பெயர் கிடையாது. சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் அவரது பெயரை ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சேர்க்கவில்லை.

அவரது ஆதரவாளர்கள் என்னை மிகவும் கொச்சைப்படுத்தினார்கள். அவரது ஆதரவாளர்கள் இரு தினங்களாக வதந்திக்கு முற்றுப்புள்ளி என கூறி வருகின்றனர். நான் பாதிக்கப்பட்டது உண்மை. இதற்கு உடந்தையாக இருந்தது சட்டமன்ற உறுப்பினர் தான். குற்றம் செய்த இருவரையும் கைது செய்து தண்டனை கொடுத்து விட்டீர்கள். இதுக்கு உடந்தையாக இருந்த சட்டமன்ற உறுப்பினரை என்ன செய்தீர்கள். எம்எல்ஏ ஆதரவாளர்கள் பாதிக்கப்பட்ட எனது புகைப்படத்தை வெளியிட்டனர்.

தலைவர் முதல்வராக வெற்றி பெற்றதும் நான் ஆடியதை வெளியிட்டனர். எம்.எல்.ஏ உடன் நான் பேசியதை வெளியிட்டனர். இதற்கெல்லாம் புலன் விசாரணை மூலம் என்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள் என தெரிந்து கொள்ள விரும்புகிறேன். திருநெல்வேலி மாவட்ட காவல் தலைவரிடம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பெயரை குறிப்பிட்டு புகார் அளித்துள்ளேன். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்துள்ளேன். மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளேன்.

நீதிமன்றத்தில் வாக்குமூலம் கேட்கும் போதும் சட்டமன்ற உறுப்பினர் வி ஜி சரவணன் குற்றவாளி என சேர்த்துள்ளேன். அப்படி இருக்கும் போது அவர் குற்றவாளி அல்ல என யார் புலன் விசாரணையில் கூறியது என அறிய விரும்புகிறேன். பாதிக்கப்பட்ட பெண் நான் கேட்கிறேன் எனக்கு பதில் சொல்ல வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டாவது முறையாக எனக்காக சட்டமன்றத்தில் பேசியுள்ளார்..

அவரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். திங்கள் கிழமை நடைபெறும் சட்டமன்றத்திலும் எனக்காக சட்டமன்ற உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை மீண்டும் கேட்க வேண்டும் என ...கேட்டுக்கொள்கிறேன். முதல்வர் விஜய் இந்த வழக்கை நேரடியாக பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். புகார் மனு கொடுத்த என்னிடம் எந்த புலன் விசாரணையும் செய்யாமல் எப்படி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் நிரபராதி என சொல்கிறார்கள் என தெரியவில்லை. கட்சியில் பெண்களுக்கு தான் மதிப்பு என கூறுகிறார்கள்.

எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கூறிய கருத்திற்கு எதிராக அவரை கைது செய்தனர். ஆனால் எனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் நெஞ்சில் குடியிருக்கும் என தலைவர் விஜய் கூறுகிறார். அவரது நெஞ்சில் நானும் குடியிருக்கிறேன் என நினைக்கிறேன். எனக்கு அவர் நல்லை தீர்ப்பை தருவார். சட்டமன்ற உறுப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+