சத்தியமா சொல்றேன்.. ஜெயில்ல வைப்பேன்.. அனிதா ராதாகிருஷ்ணனை மிரட்டிய இளைஞர்.. யார் அவர்? வைரல் வீடியோ

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: "சத்தியமா சொல்றேன்.. இந்த 18 வருஷத்துல நீ செய்த அயோக்கியத்தனம் எல்லாத்துக்கும் நான் ப்ரூப் வெச்சிருக்கேன்.. இந்த உலகுக்கு காமிக்க போறேன்.. உன்னை நான் தூத்துக்குடி ஜெயிலில் வெப்பேன்.." என்று திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷணனை இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுக்கும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

திமுக எம்எல்ஏவான அனிதா ராதாகிருஷ்ணனை விமர்சித்து மணிகண்டன் என்பவர், தன்னுடைய "தீபிகா மணிகண்டன்" என்ற பேஸ்புக்கில் மீம் ஒன்றை உருவாக்கி பதிவு போட்டிருந்தார்.. மணிகண்டன் திருச்செந்தூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் ஆவார்.

threatened video to mla anitha radhakrishnan

இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு இளைஞரின் வீட்டுக்கே சென்று குடும்பத்தினரை மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் திரும்பவும் ஒரு வீடியோவில் ஆபாச வார்த்தைகளை சொல்லி அனிதா ராதாகிருஷ்ணனை சரமாரி மிரட்டி உள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:

"நண்பர்களுக்கு எல்லாருக்கும் என் வணக்கம்.. இது எனக்கும் திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதாவுக்கும் நடக்கிற விஷயம்.. அனிதா ராதாகிருஷ்ணா.. நீ யார் பேர்ல இல்லீகலா சொத்து சொத்து சேர்த்திருக்கிறேன்னு ஒரே ஒரு மீம் போட்டேன்.. ராத்திரி 1 மணிக்கு ஒரு மீம் போட்டேன்.. ஆனால் பதறியடிச்சிட்டு என் வீட்டுக்கு காலைல 5 மணிக்கு ஆள் அனுப்பி மிரட்டியிருக்கே.. நீ ஒரு தப்பு பண்ணிட்டே அனிதா ராதாகிருஷ்ணன்.. நீ என்னை தனியா கூப்பிட்டு பேசியிருக்கணும்.

ஆனால் என் அம்மா, அப்பா, என் தம்பி, தம்பி பொண்டாட்டி எல்லாரும் இருக்கிற இடத்துல ஆள் அனுப்பி.. என் வீட்டுல வந்து வெச்சு.. அவங்களை பயம் காட்டியிருக்கே.. சத்தியமா சொல்றேன்.. இந்த 18 வருஷத்துல நீ செய்த அயோக்கியத்தனம் எல்லாத்தையும் நான் வெச்சிருக்கேன்.. ஜூலை 31, 2018-ல் என்னை மிரட்டும்போதே, உன் சம்பந்தப்பட்ட எல்லா அயோக்கியத்தனத்தை வெளியே கொண்டு வரணும்னு முடிவு பண்ணிட்டேன்.

அனிதா ராமகிருஷ்ணன்.... திருச்செந்தூரில் யார் யார் பேரில் பினாமியில் நீ சொத்து சேர்த்திருக்கேன்னு, என்னென்ன அயோக்கியத்தனம் நடந்தது, எந்தெந்த ஆர்டிஓ-வை கரெக்ட் பண்ணி தப்பை மறைச்சிருக்கே, ஆழ்வார் திருநகரில் நடந்த கொலையை மறைச்சிருக்கே, வேலை வாங்கி தர்றேன்னு சொல்லிட்டு எத்தனை பேர் கிட்ட காசு புடுங்கியிருக்கே, சாதி பேரை சொல்லி எத்தனை பேரை நாறடிச்சிருக்கே, உன்னை எதிர்த்து பேசின ஒருத்தனை கொலை பண்ணியிருக்கே, அந்த சாட்சி வரைக்கும் என்கிட்ட இருக்கு. நீ எப்போ ஆளுங்களை விட்டு என் வீட்டுக்கு வந்து மிரட்டினியோ, அன்னைக்கே நான் முடிவு பண்ணிட்டேன், நீ பண்ண எல்லா அயோக்கியத்தனத்தையும் இந்த உலகுக்கு காமிக்கணும்னு!

2011-ல் ஜெயலலிதா உன்னை எப்படி திருச்சி ஜெயில்ல வெச்சாங்களோ, அதே மாதிரி உன்னை நான் தூத்துக்குடி ஜெயிலில் வெப்பேன்.. மெட்ராஸ்-ல பினாமி வெச்சு தொழில் பண்ணினா, திருச்செந்தூரில் தெரியாதா? எல்லாத்தையும் காட்டறேன்.. அப்பறம் திருச்செந்தூரில் ஸ்டேஷனில் இருக்கிற போலீசுக்கு எல்லாம் நான் ஒரு சின்ன வார்னிங் தர்றேன்... காக்கி சட்டை போட்டுட்டு பப்ளிக் சர்வீஸ் பண்றீங்களா? எம்எல்ஏ சர்வீஸ் பண்றீங்களா? பிரச்சனை என்னன்னு கேட்டு விசாரிக்கணும்... எல்லாரையும் கதற விடுவேன்" என்கிறார்.

இந்த இளைஞர் யார், என்ன விவரம் தெரியவில்லை.. ஆனால் ஒரு கட்சியின் மூத்த தலைவரை, அதுவும் எம்எல்ஏவாக பதவியில் இருக்கக்கூடியவரை அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் மிரட்டி உள்ளார்.. மேலும் காவல்துறையை கண்ணியமற்ற வகையிலும் விமர்சித்தும் பேசியுள்ளது பொதுமக்கள் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+