ஷாக்.. செல்போனில் ஆபாச படம் பார்த்து 9 வயது சிறுவனுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி மாணவர்கள் மூவர் கைது
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே ஆன்லைன் வகுப்புக்காக பெற்றோர் கொடுத்த செல்போனில் ஆபாச படங்களை பார்த்த மூன்று சிறுவர்கள் வீட்டருகே வசிக்கும் 9 வயது சிறுவனை பல நாட்களாக பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கிய புகாரில் கைது செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக தற்போது ஆன்லைன் வகுப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான நேரங்களில் மாணவர்கள் செல்போன்களிலேயே மூழ்கி கிடக்கின்றனர்.
பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் படிப்பில் கவனமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு கண்டுகொள்வதில்லை. ஆனால் சில நேரங்களில் செல்போன்களில் ஆபாச படங்கள், ஆன்லைன் கேம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்திகின்றனர்.

தூத்துக்குடியில் அதிர்ச்சி
சில நேரங்களில் ஆபாச படங்களைப் பார்த்து குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்களும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்பில் செல்போனில் ஆபாச படங்களை குழுவாக பார்த்த 13 மற்றும் 14 வயது 3 சிறுவர்கள் அருகில் வசிக்கும் 9 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம்தான் தூத்துக்குடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 மற்றும் 14 வயதுடைய மூன்று சிறுவர்கள் எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தனர்.

ஆன்லைன் வகுப்புக்காக செல்போன்
தற்போது கடந்த சில நாட்களாக காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருவதால் அவர்களது பெற்றோர் அவர்களுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளனர். செல்போனில் அவ்வப்போது கேம் விளையாண்டு வந்தவர்கள் தொடர்ந்து அதில் வந்த ஆபாச வீடியோக்களை பார்த்திருக்கின்றனர் தொடர்ந்து ஆபாச வீடியோக்கள் தோன்ற தூண்டப்பட்டவர்கள் குழுவாக சேர்ந்து ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் இருந்த வீட்டு அருகே வசித்து வரும் ஒன்பது வயது சிறுவன் ஒருவனுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. மேலும் மேற்கண்ட மாணவர்களை பார்த்ததும் அவன் பயத்தில் அலறி மயக்கமடைந்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை
இதையடுத்து 9 வயது சிறுவனின் பெற்றோர் அவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை மற்றும் மருத்துவர்களின் மனநல ஆலோசனைக்குப் பிறகு சிறுவனிடம் விசாரித்த போது தனது வீட்டருகே வசித்து வந்த 3 மாணவர்கள் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அதிர்ச்சித் தகவலை அந்த மாணவன் கூறியுள்ளார். ஆன்லைன் வகுப்பின் போது ஆபாச படங்கள் பார்த்த சிறுவர்கள் இதனால் தூண்டப்பட்டு அந்த சிறுவனை தனியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனால் உடல் மற்றும் மன உளைச்சல் தாங்க முடியாமல் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஜனவரி 6ஆம் தேதி கோவில்பட்டி அரசு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஜனவரி 15ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சிறுவர்கள் கைது
இதையடுத்தே மருத்துவர் விசாரித்தபோது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிய வந்ததையடுத்து கோவில்பட்டி காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுவர்கள் 3 பேர் மீது,பாலியல் வன்கொடுமை சட்டம் 4, 5 ஐ, 5 மீ, 6 உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர் தற்போது பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவன அதிர்ச்சியில் இருந்து நீக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், பெற்றோர் தங்கள் குழந்தைகள் ஆன்லைன் வகுப்பின் போது பாடங்களை தான் கவனிக்கிறார்களா என்பதை பெற்றோர்கள் அடிக்கடி உறுதி செய்ய வேண்டும் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications