நேத்து மணப்பாடு.. இன்னைக்கு திருச்செந்தூர்.. சாரை சாரையாக ஒதுங்கிய மீன்கள்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடில் கடந்த 11 ஆம் தேதி கடற்கரையில் மீன்கள் கொத்து கொத்தாக உயிருடன் கரை ஒதுங்கிய நிலையில் இன்று திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் லட்சக்கணக்கில் சாளை மீன்கள் உயிருடன் கரை ஒதுங்கியுள்ளன. திடீரென மீன்கள் இப்படி உயிருடன் கரை ஒதுங்கியது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே கடலுக்குள் ஏதேனும் சூழலியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்த்தில் கடைக்கோடியில் உள்ள மீனவ கிராமம் மணப்பாடு. சுற்றுலாவுக்கு பெயர் போன இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மீன்பிடி தொழில் பிரதானமாக உள்ளது. நாட்டுப்படகில் தினமும் நுற்றுக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்று வருகிறார்கள்.

Tiruchendur

திருச்செந்தூரில் கரை ஒதுங்கிய மீன்கள்

இந்த கடல் பகுதியில் சாளை மீன்கள் அதிகம் விற்கப்படும். இந்த மீன்கள் நல்ல ருசியாக இருப்பதால் மக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள். இந்த சூழலில், கடந்த வாரம் அதாவது 11 ஆம் தேதி திடீரென கடலோரத்தில் சாரை சாரையாக பல ஆயிரக்கணக்கான சாளை மீன்கள் உயிரோடு கரை ஒதுங்கின. உயிருடன் மீன்கள் கரை ஒதுங்கிய நிலையில் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இன்னொரு பக்கம் மீன்களை போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் அள்ளி சென்றதையும் பார்க்க முடிந்த்து. திடீரென மீன்கள் இப்படி உயிருடன் கரை ஒதுங்கியது ஏன்? என்ற கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்காத நிலையில் இன்று காயல்பட்டினம் அருகே மீன்கள் லட்சக்கணக்கில் கரை ஒதுங்கின. கடற்கரை முழுவதும் மீன்களாகவே தென்பட்டன.

இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை

அலை அலையாய் மீன்கள் கடற்கரைக்கு அடித்து வரப்பட்டதை அங்குள்ள மக்கள் விய்ப்புடனுன் அதிர்ச்சியுடனும் பார்த்தனர். மீன்கள் தொடர்ச்சியாக இப்படி கரை ஒதுங்குவதற்கு என்ன காரணம் என்று உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்று மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் ஏதேனும் சூழலியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

கடல் அரிப்பு அதிகரிப்பு

திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கடற்கரையோரம் இருந்த பனைமரங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு வருகின்றன. தற்போது மீன்களும் உயிருடன் கரை ஒதுங்கி வருவது அப்பகுதி மக்களுக்கும், மீனவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக இந்த மீன்கள் கரை ஒதுங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக சாளை மீன்கள் கடலோர பகுதிகளில் அதிகம் காணப்படும் மீனாக இருப்பதால், கடலில் ஏற்பட்ட பருவமழை மாற்றங்களால் கரைகளுக்கு அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படும் நிலையில், மீனவளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+