திருச்செந்தூர் கோவிலில் மீண்டும் முறைகேடு புகார்.. வீடியோ எடுத்தவரை தாக்கிய அர்ச்சகர்கள்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், முதியோர் வரிசையில் முதியோர்கள் அல்லாத வேறு சில நபர்களை அர்ச்சகர்கள் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனை வீடியோ எடுத்த சமூக ஆர்வலரை அர்ச்சகர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருப்பது திருச்செந்தூர். வங்க கடலோரம் அமைந்து இருக்கும் இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இதனால் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த கோவிலில் விடுமுறை நாட்களில் பொது தரிசனத்தில் 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

Tiruchendur Murugan temple

ஏன் வீடியோ எடுத்தாய்

இந்த நிலையில் இன்றும் திருச்செந்தூர் கோவிலில் ஆணித் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து முருகப்பெருமான தரிசனம் செய்யவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இதில் முதியவர்களுக்கு என உள்ள தனி வரிசையில் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆதாரங்களை காட்டி முதியவர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர். ஆனால் முதியோர் வரிசையில் முதியோர்கள் அல்லாத வேறு சில நபர்களை அர்ச்சகர்கள் அழைத்து சென்றுள்ளனர்.

இதனை பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த அர்ச்சகர்கள் சமூக ஆர்வலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏன் வீடியோ எடுத்தாய்.. என்னை வீடியோ எடுக்க நீ யார்.. என தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. நான் அப்படித்தான் எடுப்பேன்.. நான் வீடியோ எடுக்கக்கூடாது என ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்டதாகவும் இதனால் அர்ச்சகர்கள் அந்த நபரை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வீடியோ எடுத்ததை பார்த்ததும், செல்போனைக் கொடு என்று சத்தம் போட்டுக்கொண்டே அர்ச்சகர்கள் தாக்க வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

திருச்செந்தூர் முருகன் கோவில்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் முருகப் பெருமானை தரிசக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையில் கோவிலில் பணி செய்யும் அர்ச்சகர்கள் சிலர் பணம் வாங்கிக்கொண்டு பக்தர்கள் சிலரை வரிசையில் காத்திருக்க வைக்காமல் நேரடியாக சாமி தரிசனம் செய்ய அழைத்து செல்வதாக தொடர்ந்து புகார்கள் எழுவது வழக்கம். தவெக ஆட்சி அமைந்த சில நாட்களில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கோவிலுக்கு மாறு வேடத்தில் ஆய்வுக்கு சென்றார்.

அப்பொது அமைச்சரிடமே கூகுள் பேவில் பணம் வாங்கி அர்ச்சகர் கையும் களவுமாக பிடிபட்டார். இதையடுத்து அர்ச்சகர் கோவில் பணிகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது. அமைச்சர் ரமேஷ் காட்டிய அதிரடிக்கு பிறகு சில நாட்கள், முறைகேடுகள் எதுவும் இன்றி கோவிலில் முறையாக அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வந்தாக சொல்லப்பட்டது..

ஆனால், ஓரிரு வாரங்களில் மீண்டும் பணம் வாங்கிக்கொண்டு சிலரை விரைவாக தரிசனம் செய்ய அழைத்து செல்லும் நிகழ்வுகள் தொடர ஆரம்பித்துவிட்டதாக பக்தர்கள் குற்றம் சாட்டிவந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+