சாமி கும்புடபோன இடத்துல.. சூரசம்ஹாரத்தில் சேட்டையை காட்டிய திருட்டுக் கும்பல்! இவ்வளவு நகை திருட்டா?
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நிறைவடைந்த நிலையில், பக்தர்களிடம் நகை மற்றும் செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் 8 பவுன் நகை, 15 செல்போன்கள், ரூ.10 லட்சத்திற்கும் மேல் இழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உலகப் புகழ்பெற்ற திருசெந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விழா முருகப் முருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகளுடன் துவங்கியது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.

இதனைத் தொடர்ந்து கந்த சஷ்டி விழாவின் ஆறாம் நாள் மூலவருக்கு விசேஷ மகா அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்ற நிலையில் முருகப்பெருமான் அம்பாளிடம் வேல் பெற்று பல்வேறு முகத்துடன் தோன்றிய யானை முகம், சிங்கமுகம், சுய முகத்தோடு வந்த சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கந்தசஷ்டி திருவிழா
இதனைத் தொடர்ந்து சூரனை வதம் செய்த வேலுக்கு அபிஷேக பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்த சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சூரசம்கார நிகழ்வை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் முழங்கபக்தி பரவசத்துடன் முருகப்பெருமானை சுவாமி தரிசனம் செய்தனர்.
8 பவுன் நகை திருட்டு
இன்று திருக்கல்யாணத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நிறைவடைந்த நிலையில், விழாவையொட்டி, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் பக்தர்களிடம் நகை மற்றும் செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கந்தசஷ்டி விழா நிறைவடைந்த தருணத்தில், சுமார் 8 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 செல்போன்கள் திருடப்பட்டுள்ளதாக கோவில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 லட்சம் ரூபாய்
இவற்றின் மொத்த மதிப்பு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவ்வளவு பெரிய அளவில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் இருந்தும் திருட்டுச் சம்பவம் நடைபெற்றிருப்பது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
பக்தர்கள் அதிர்ச்சி
லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்த முக்கிய திருவிழா காலத்தில் நடைபெற்ற இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு திருட்டில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து, திருடப்பட்ட நகைகள் மற்றும் செல்போன்களை மீட்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
