வேல் பொட்டு வச்சு.. ஆட்டைய போடும் கும்பல்! திருச்செந்தூர் கோவிலில் பகீர் மோசடி! தூங்கும் போலீஸ்?
தூத்துக்குடி: உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களும் நூதன முறையில் திருட்டு நடைபெற்று வருகிறது. பக்தர்களின் உடைமைகளை பாதுகாப்பதாக கூறி அவர்களது செல்போன் உள்ளிட்டவற்றை ஒரு கும்பல் திருடி வருகிறது. இந்த நிலையில் ஈடுபட்டவர்களை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக பகீர் புகாரினை முன்வைக்கின்றனர் பக்தர்கள்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் திருவிழா, விசேஷ நாட்களை தவிர்த்து நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களும் நூதன முறையில் திருட்டு நடைபெற்று வருவதாக அதிர்ச்சி தரும் தகவலை சொல்கின்றனர் பக்தர்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவர் அவரது குடும்பத்தினருடன் கடந்த ஏழாம் தேதி மாலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்துள்ளார்.

திருச்செந்தூர் கோவில்
கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள ஒரு கண்டெய்னர் பாக்ஸ் அருகே சிறுவர்கள் உட்பட சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் பக்தர்களுக்கு வேல் பொட்டு வைத்து வந்துள்ளனர். இவர்கள் வருகின்ற பக்தர்களிடம் உடைமைகளை பாதுகாப்பதாக கூறி ரூபாய் முப்பது பெற்றுக்கொண்டு உடமைகளை அந்த கண்டெய்னர் பாக்ஸ் உள்ளே வைத்துள்ளனர்.
வேல் பொட்டு மோசடி
கோவிலில் பக்தர்கள் உடைமைகளை பாதுகாக்க தனியறை உள்ளது. ஆனால் விவரம் தெரியாத பக்தரிடம் இவர்கள் இதுதான் கோவில் பக்தர்களின் உடமைகளை பாதுகாக்க கூடிய இடம் என்று கூறி விவரம் தெரியாத பக்தர்களிடம் அவரது உடைமைகளை வாங்கி வைத்து வந்துள்ளனர். கிருஷ்ணகிரி சேர்ந்த பக்தர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்து உடமைகளை பெற்றுக் கொண்டபோது அதில் செல்போன் இல்லை என தெரியவந்தது.
செல்போன் திருட்டு
மேலும் உடமையை வாங்கி வைத்த சிறுவன் அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் செல்போனுக்கு உரிய பில் கேட்டதால் நேற்று முன்தினம் வந்து பில்லை கொடுத்துள்ளனர். மேலும் அந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவனையும் பிடித்துக் கொடுத்துள்ளனர். ஆனால் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வருவதாக பக்தர் குற்றம் சாட்டினார்.
பக்தர்கள் புகார்
மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் அடிக்கடி திருடப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. காரில் இருக்கும் உடைமைகளும் கடற்கரையில் குளிக்கும் போது பக்தர்கள் கொண்டு சென்ற உடைமைகளும் நூதன முறையில் தொடர்ந்து திருடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் திருப்பி திருச்செந்தூருக்கும் அலைய வேண்டியது உள்ளது என எண்ணி புகாரை பெயரளவில் கொடுத்துவிட்டு சென்று விடுகின்றனர்.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
இதனைப் பயன்படுத்திக் கொண்ட போலீசார் புகார் மீது எந்த ஒரு முழுமையான விசாரணையும் நடவடிக்கையும் எடுப்பதில்லை. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் கடந்த சில மாதங்களாக வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் உட்பட சுமார் 100 பேர் கோவில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் நின்று கொண்டு வேல் பொட்டு வேல் பொட்டு என்று கூவி பக்தர்களுக்கு வேல் போட்டு அச்சு மூலம் வைத்துவிட்டு ரூபாய் பத்தை பெற்றுக் கொள்கின்றனர்.
திருச்செந்தூர் போலீஸ்
அதில் ஒரு சிலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று போலீசாருக்கு பல்வேறு புகார் வந்த போதும் நடவடிக்கை எடுக்காததால் மேலும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் முழு விசாரணை நடத்தி இது மாதிரி பக்தர்களிடம் நூதன முறையில் திருடும் கொள்ளை கும்பல்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications