தூத்துக்குடி ஆறுமுகநேரியில் இரவில் ஐடி ஊழியரை நடுரோட்டில் இறக்கிவிட்ட அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு சென்ற பேருந்து ஓட்டுநர், ஆறுமுகநேரியில் ஊருக்குள் செல்லாது எனக் கூறி ஐ.டி. நிறுவன பெண் ஊழியரை இரவில் நடுரோட்டில் பைபாஸில் இறக்கிவிட்டார். இதை கண்டித்து அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்த செய்திகள் செய்தி ஊடகங்களில் நேற்று வெளியாகியது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், சம்பந்தப்பட்ட பேருந்தில் ஓட்டுநர், நடத்துனரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காமராஜ்புரம் பகுதியை சேர்ந்த மில்லர் என்பவர் நாம் தமிழர் கட்சியின் நகர பொறுப்பாளராக இருக்கிறார். இவரது மகளான 21 வயதாகும் ஜெனிசர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தினமும் காலையில் பணிக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவது வழக்கமாக வைத்துள்ளார்.

Tuticorin Govt bus driver suspended for dropping an IT employee in road at night in Arumuganeri

நேற்று முன்தினம் இரவில் மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பஸ் சென்றுள்ளது. அந்த பேருந்து தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் நின்றுள்ளது. அந்த பேருந்தில் ஜெனிசர் ஏறியிருக்கிறார் அதில் ஆறுமுகநேரிக்கு ரூ.30 கொடுத்து டிக்கெட் வாங்கியிருக்கிறது. ஆத்தூர் பகுதியில் வந்தவுடன் ஆறுமுகநேரி ஊருக்குள் பஸ் செல்லாது. ஆகவே, ஆறுமுகநேரிக்கு டிக்கெட் எடுத்தவர்கள் ஆத்தூரில் இறங்குங்கள் என்று கண்டக்டர் கூறியிருக்கிறார். ஒரு சில பயணிகள் கீழே இறங்கினார்கள். ஆனால் ஜெனிசர் இறங்கவில்லை.

தொடர்ந்து பஸ் புறப்பட்டு சென்றது. ஆறுமுகநேரி அடுத்த சாகுபுரம் அருகே பஸ் சென்றபோது அந்த பெண் இறங்கவில்லை. அவரை ஊருக்குள் இறக்கிவிட்டு செல்வோம் என்று டிரைவரிடம் கண்டக்டர் கூறினார். ஆனால், டிரைவர் அது எல்லாம் முடியாது எனக் கூறியிருக்கிறார, அந்த இளம் பெண்ணை ஆறுமுகநேரி வடக்கு புறநகர் பகுதியான கடலோர காவல் நிலைய சோதனை சாவடி அருகே இறங்க கூறினார். இந்த சம்பவங்களுக்கு இடையே ஜெனிசர் செல்போன் மூலம் தனது தந்தை மில்லருக்கு நடந்த விவரங்களை கூறியிருக்கிறார்

அவர், த.வெ.க., அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் ஆறுமுகநேரி வடக்கு புறநகர் காவல் சோதனை சாவடிக்கு விரைந்தனர். அங்கு பஸ் வந்தவுடன் நடு ரோட்டில் ஜெனிசர் கீழே இறக்கிவிடப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். தொடர்ந்து அங்கு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 20 நிமிட பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஜெனிசரை மீண்டும் அதே பஸ்சில் ஏற்றி ஆறுமுகநேரி ஜெயின் பஜாரில் டிரைவர் இறக்கி விட்டார். பின்னர் அந்த பஸ் திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட பதிவில் கூறுகையில், மதுரை மண்டலம், புதுக்குளம் கிளையை சார்ந்த பேருந்து (TN 58 N 2368), மதுரையிலிருந்து திருச்செந்தூர் சென்று கொண்டிருந்த போது வழித்தட விதியை மீறி ஆறுமுகநேரிக்கு செல்லாமல் பைபாஸ் சாலை வழியாக செல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயணிகள் நலன் மற்றும் வழித்தட விதியை மீறியதற்காக சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் தற்காலிக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பயணிகளின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயணத்தை உறுதி செய்ய தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, இதுபோன்ற விதிமீறல்கள் மீண்டும் நடைபெறாத வகையில் உரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்துகள் பொதுவாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் சில ஊருக்குள் வராமல் பைபாஸில் இறக்கிவிடுவது தொடர்கதையாக இருக்கிறது. ஆறுமுகநேரி போலவே பல ஊர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாங்குநேரியில் டோல்கேட் அல்லது பைபாஸிலேயே பயணிகளை இறக்கிவிட்டுச் செல்வது தொடர்கிறது. அதேபோல் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் பகுதியிலிருந்து நாகர்கோவில் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் வள்ளியூரில் ஊருக்குள் செல்லாமல் பைபாஸிலேயே இறக்கிவிடுகின்றன. அதேபோல் நாங்குநேரி-வள்ளியூர் பாதையில் அமைந்திருக்கும் பணங்குடியிலும் இரவு நேரங்களில் பயணிகள் புறவழிச்சாலையிலேயே இறக்கிவிடுகிறார்கள். திருநெல்வேலி - நாகர்கோவில் எல்லையில் உள்ள காவல்கிணறு என்ற ஊரிலும் பைபாஸ் பிரச்சனை உள்ளது.

தூத்துக்குடி - திருச்செந்தூர் பாதையில் ஆறுமுகநேரி & ஆத்தூர் பகுதிகளில் இரவு நேரங்களில் பேருந்துகள் ஊருக்குள் வராமல் மெயின் ரோட்டிலேயே இறக்குவது தொடர்கதையாக உள்ளது. அதேபோல் மதுரை - நெல்லை நெடுஞ்சாலையில் பல பேருந்துகள் எட்டயபுரம் ஊருக்குள் செல்லாமல் பைபாஸ் டோல்கேட் அருகிலேயே ஆட்களை இறக்கிவிட்டுச் செல்வதும் தொடர்கிறது. கோவில்பட்டியில் சில விரைவுப் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்குச் செல்லாமல் பைபாஸ் வழியே நேரடியாகச் சென்றுவிடுவதும் தொடர்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூரிலும் இதே பிரச்சனை இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+