தூத்துக்குடிக்கு ஜாக்பாட்.. இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப்பாக மாறும் முத்துநகர்! சத்தமின்றி சாதித்த தெற்கு
தூத்துக்குடி: தூத்துக்குடி கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது. இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப்பாக தூத்துக்குடி மாற தொடங்கி உள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. 2 நாட்கள் நடக்கும் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் பின் வரும் முதலீடுகள் செய்யப்பட்டன. தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளாக குவிந்து வருகின்றன.

வேலைவாய்ப்புகள்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இரண்டு நாட்களில் மட்டும் 4 இலட்சம் நேரடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. மொத்தமாக இந்த மாநாட்டில் 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்யப்பட்டு உள்ளன.
டாடா - 12,082 கோடி ரூபாய் முதலீடு 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு
வின்பாஸ்ட் - 16,000 கோடி ரூபாய் முதலீடு 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு
ஜே.எஸ்.டபிள்யூ - ரூ.12,000 கோடி ரூபாய் முதலீடு 6,600 பேருக்கு வேலைவாய்ப்பு
பர்ஸ்ட் சோலார்- 8,100 கோடி ரூபாய் முதலீடு 1.100 பேருக்கு வேலைவாய்ப்பு
TVS - 5,000 கோடி ரூபாய் முதலீடு 500 பேருக்கு வேலைவாய்ப்பு
பெகட்ரான் - 1,000 கோடி ரூபாய் முதலீடு 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு
மிட்சுபிஷி - ரூ.200 கோடி ரூபாய் முதலீடு 50 பேருக்கு வேலைவாய்ப்பு
கோத்ரெஜ்- 515 கோடி ரூபாய் முதலீடு 446 பேருக்கு வேலைவாய்ப்பு
Qualcomm - 177 கோடி ரூபாய் முதலீடு 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு
ஹூண்டாய் - 1,180 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.
கவனம்: இந்த மாநாட்டில் அதிகம் கவனிக்கப்பட்டது தூத்துக்குடி, சென்னை, கோவை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள். இங்குதான் அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி முதலீடு: தூத்துக்குடி கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது. இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப்பாக தூத்துக்குடி மாற தொடங்கி உள்ளது.
ACME - 52,000 கோடி
பெட்ரோனாஸ் - 34,000 கோடி
செம்பிகார்ப் (இன்று) - 36,238 கோடிகள்
லீப் கிரீன் எனர்ஜி (இன்று)- 22,842 கோடிகள்
என்டிபிசி ஆகியவை முதலீடு செய்துள்ளனர். இந்திய அரசு ஏற்கனவே VOC துறைமுகத்தை ஹைட்ரஜன் சேமிப்பு மையமாக அறிவித்துள்ளது.
வின்பாஸ்ட்: சென்னைக்கு வர இருந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடிக்கு செல்ல முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் தொடர் பேச்சுவார்த்தை காரணமாக இந்த முடிவை வின்பாஸ்ட் நிறுவனம் எடுத்துள்ளதாம்.
டெஸ்லாவிற்கு போட்டியாக இருக்கும் வின்பாஸ்ட் நிறுவனம்தான் தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக செய்திகள் வருகின்றன. வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்பது வியட்நாமை தளமாகக் கொண்ட ஒரு வாகன நிறுவனமாகும் இது வியட்நாமின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும்.
இப்போது இ வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கிறது. மின்சார கார்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் போன்ற மின்சார வாகனங்களை (EV) தயாரிப்பதில் விரிவடையும் முதல் கார் பிராண்டாகும். உலகின் நம்பர் 1 பிராண்ட் இதுதான். இந்த நிறுவனம்தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. அதுவும் தூத்துக்குடிக்கு தேடி வந்துள்ளது.
சென்னைக்கு வர இருந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடிக்கு செல்ல முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் தொடர் பேச்சுவார்த்தை காரணமாக இந்த முடிவை வின்பாஸ்ட் நிறுவனம் எடுத்துள்ளதாம்.
அரசு தரப்பு வட்டார தகவல்கள்: தமிழ்நாட்டில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தூத்துக்குடி தொடர்பான சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்று வெளியாக இருக்கிறதாம். இது தொடர்பாக தமிழ்நாடு தொழில்துறை வட்டாரம் வெளியிட்ட தகவலில், இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் சில முதலீடுகள் தென் தமிழ்நாட்டிற்கு செல்லும். ஆயிரக்கணக்கான உயர்தர வேலைகளைஇது உருவாக்கும். ஒரு உற்பத்தி மையமாக தூத்துக்குடியை மாற்ற போகும் ஒரு சிறப்பு அறிவிப்பு உள்ளது. இது மிகவும் மதிப்புமிக்க சர்வதேச நிறுவனம் ஒன்று தூத்துக்குடிக்கு வர உள்ளது..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications