இன்னும் கொஞ்ச காலம்தான்.. விட்டா சென்னையையே இந்த கடலோர மாவட்டம் முந்திவிடும்.. அசத்தல் முன்னேற்றம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: சென்னையை விட தமிழ்நாட்டில் ஒரு மாவட்டம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட எதிர்காலத்தில் சென்னையை நெருங்கும் அளவிற்கு ஒரு மாவட்டம் வேகமாக முன்னேறி வருகிறது. அந்த மாவட்டம் தூத்துக்குடி!

கடந்த 1 வருடத்தில் தூத்துக்குடிக்கு 1,40,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்கள் கிடைத்துள்ளன. மொத்த தமிழ்நாடு மாநிலத்தை பசுமையான ஹைட்ரஜன் மையமாக மாற்ற தூத்துக்குடி மையமாக மாறி உள்ளது.

Tuticorin

இன்றுதான் சிங்கப்பூரின் செம்கார்ப் நிறுவனம் தூத்துக்குடியில் ₹36,238 கோடி
முதலீடு செய்வதாக அறிவித்தது. பசுமை ஹைட்ரஜன் அலகு அமைக்க முதலீடு செய்வதற்கான ஆரம்ப கட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டுள்ளது. இதன் மூலம் தூத்துக்குடியில் சுமார் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவித்தது.

பல முதலீடு: தூத்துக்குடியில் கடந்த மாதம் முதல் வின்பாஸ்ட் தொழிற்சாலையின் கட்டுமானம் நடந்து வருகிறது தூத்துக்குடி கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி தொழிற்சாலைகளின் கிளஸ்டராக மாற தொடங்கி உள்ளது. அதன்படி தூத்துக்குடியில் பின்வரும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ACME - 52,000 கோடி
பெட்ரோனாஸ் - 34,000 கோடி
செம்பிகார்ப் (இன்று) - 36,238 கோடிகள்
லீப் கிரீன் எனர்ஜி (இன்று)- 22,842 கோடிகள்
என்டிபிசி ஆகியவை முதலீடு செய்துள்ளனர். இந்திய அரசு ஏற்கனவே VOC துறைமுகத்தை ஹைட்ரஜன் சேமிப்பு மையமாக அறிவித்துள்ளது.

வின்பாஸ்ட்: சென்னைக்கு வர இருந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடிக்கு செல்ல முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் தொடர் பேச்சுவார்த்தை காரணமாக இந்த முடிவை வின்பாஸ்ட் நிறுவனம் எடுத்துள்ளதாம்.

டெஸ்லாவிற்கு போட்டியாக இருக்கும் வின்பாஸ்ட் நிறுவனம்தான் தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக செய்திகள் வருகின்றன. வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்பது வியட்நாமை தளமாகக் கொண்ட ஒரு வாகன நிறுவனமாகும் இது வியட்நாமின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும்.

அருகருகே வருகின்றன: தூத்துக்குடியில் திங்கள் முதல் வின்பாஸ்ட் தொழிற்சாலையின் கட்டுமானம் தொடங்க உள்ளது. இந்த இடத்திற்கு அருகிலேயே தூத்துக்குடி சிப்காட்டில் அமையும் சர்வதேச பர்னிச்சர் பார்க் அமைக்கப்பட உள்ளது.

இப்போது இ வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கிறது. மின்சார கார்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் போன்ற மின்சார வாகனங்களை (EV) தயாரிப்பதில் விரிவடையும் முதல் கார் பிராண்டாகும். உலகின் நம்பர் 1 பிராண்ட் இதுதான். இந்த நிறுவனம்தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. அதுவும் தூத்துக்குடிக்கு தேடி வந்துள்ளது.

ஓசூர் முன்னேற்றம்: ஓசூரில் அமைய உள்ள 3வது சிப் காட்டில் உள்ள அனைத்து யூனிட்களும் விற்பனை ஆகி உள்ளன. 90 சதவிகித யூனிட் விற்பனை ஆன நிலையில், இன்னும் 10 சதவிகித யூனிட்டை வாங்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஓசூர் பகுதிக்கு 3வதாக ஒரு சிப்காட். சூளகிரியில் 1022 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள து. சிப்காட் தொழில் பூங்காவின் வளர்ச்சிக்கு சுற்றுச்சூழல் அனுமதி (EC) கிடைத்த நிலையில் இங்கே கட்டுமான பணிகள் நடக்கின்றன.

இங்கே ஏற்கனவே டாடா குழுமம் ஓசூரில் உள்ள ஐபோன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை விட இரண்டு மடங்கு அளவுக்கு விரிவுபடுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. நடந்து வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டாடா - 12,082 கோடி ரூபாய் முதலீடு 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 40,000+ பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 20 அசெம்பிளி லைன்கள் கொண்ட புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்த வருடம் சென்னைக்கு மட்டுமின்றி வேறு பல மாவட்டங்களுக்கும் முக்கியமான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. முக்கியமாக பல மாவட்டங்களில் முதலீடுகள் செய்யப்படுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின.

அதன்படி தமிழ்நாட்டில் இந்த வருடம் ரூ100 கோடியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஓசூரில் முதலீடு: முக்கியமாக ஓசூரில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. உதாரணமாக தமிழ்நாட்டில் மின்சார பேட்டரி வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதற்காக ஓசூரில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுக்கும், ஓலா நிறுவனத்திற்கும் இடையே 7614 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கியமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழ்நாடு நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மேலும் 20 மெகாவாட் மின்கலன்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலைகளை அமைக்கவும் ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த சிப்களை உற்பத்தி செய்யும் உலகிலேயே பெரிய ஆலையாக இது இருக்க போகிறது என்று ஓலா நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த ஆலைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பூங்காவில் அமைக்கப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3,111 நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+