சர்வாதிகாரியாக செயல்படுவேன் என ஸ்டாலின் பேசியது ஏன்.. கனிமொழி விளக்கம்
Recommended Video
தூத்துக்குடி: கட்சியின் வளர்ச்சிக்காகவே சர்வாதிகாரியாக செயல்படுவேன் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்ததாக தூத்துக்குடி எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக் குழு கூட்டம் சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது ஸ்டாலின் கூறுகையில் அனைவரும் ஒத்துழைத்தால்தான் வெற்றி கிட்டும். மாவட்ட செயலாளர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். கட்சியின் வளர்ச்சிக்காக முடிவெடுக்க வேண்டும் என்றால் நான் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என பேசியிருந்தார்.
இந்த நிலையில் சர்வாதிகாரியாக மாறுவேன் என ஸ்டாலின் சொன்னதை அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இதுகுறித்து தூத்துக்குடியில் எம்பி கனிமொழி கூறுகையில் உள்ளாட்சி தேர்தல் நிச்சயமாக நடைபெற வேண்டும் என்பதுதான் கோரிக்கையாக உள்ளது.
திமுக தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளது. திமுக கொடுத்த அழுத்தத்தினால்தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. கட்சியின் வளர்ச்சிக்காக முடிவெடுக்க வேண்டும் என்றால் அதை தைரியமாக தெளிவாக எடுக்க வேண்டும்.
அதற்காக நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என ஸ்டாலின் கூறியிருந்தார். அதை அரசியல் காரணங்களுக்காக புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு என்றார் கனிமொழி.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications