ஈபிஎஸ் போட்டோவையா எரிக்கிறீங்க.. தூத்துக்குடி மாவட்ட முக்கிய பாஜக நிர்வாகியை தூக்கிய அதிமுக.. ஆஹா
பாஜகவில் விலகுபவர்களை அதிமுகவில் சேர்ப்பதை நிறுத்தகோரி நேற்று கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படம் எரிக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்துள்ளார்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பாஜக நிர்வாகிகள் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் படத்தை தீவைத்து எரித்தனர். இந்த சம்பவங்கள் அதிமுக-பாஜக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் பாஜகவில் இருந்து விலகுபவர்களை அதிமுகவில் சேர்ப்பதை நிறுத்தக்கோரி நேற்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படம் எரிக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய நிர்வாகியை அதிமுக தட்டித்தூக்கி உள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக நீடித்து வருகிறது. இந்நிலையில் தான் சமீப காலமாக இருகட்சி தலைவர்கள் இடையேயும் வார்த்தை போர் வெடித்து வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேளையில் பிரச்சனை ஓரளவு அமைதியாக இருந்தது.
இந்நிலையில் தான் தற்போது அதிமுகவினரை பாஜகவினரும், பாஜகவினரை அதிமுகவினரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே தான் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு(ஐடி விங்க்) தலைவர் நிர்மல்குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவர் மாநில தலைவர் அண்ணாமலையை 420மலை என விமர்சனம் செய்தார்.

அதிமுகவில் இணையும் பாஜகவினர்
இதன் தொடர்ச்சியாக மேலும் பல நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். பாஜக ஐடி விங்க் செயலாளர் திலீப் கண்ணன், ஓபிசி பிரிவு மாநில செயலாளர் அம்மு என்ற ஜோதி, அறிவுஜீவி பிரிவு முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், திருச்சி மாநகர் மாவட்ட துணை தலைவர் விஜய், உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில செயலாளர் லதா, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் வைதேகியும் எடப்பாடியை சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.

கூட்டணியில் குழப்பம்
பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பாஜகவில் இருந்து விலகுபவர்களை அதிமுகவில் இணைத்து கொள்வதை பாஜகவினர் விரும்பவில்லை. இதை வெளிக்காட்டும் வகையில் தான் நேற்று மாநில தலைவர் அண்ணாமலை, ‛‛ஒவ்வொரு வினைக்கு எதிர்வினை உண்டு'' என மறைமுகமாக அதிமுகவை விமர்சனம் செய்திருந்தார். இதனால் அதிமுக-பாஜக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஈபிஎஸ் போட்டோக்கள் எரிப்பு
இது ஒருபுறம் இருக்க தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே பாஜக இளைஞர் அணியை சேர்ந்த 4 பேர் கூட்டணி தர்மத்தை மீறி பாஜக நிர்வாகிளை அதிமுக இணைத்து கொள்வதாக குற்றம்சாட்டி எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை தீவைத்து எரித்தனர். இதனால் அதிமுகவினர் கோபமடைந்துள்ளனர். பாஜகவினரின் செயலுக்கு அதிமுக தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பாஜகவினரை கண்டித்துள்ளனர்.

அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகி
இதனால் இந்த கூட்டணி வரும் காலத்தில் தொடருமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கோமதி பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்துள்ளார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவராக இருந்த கோமதி தற்போது விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இவர் முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்எல்ஏவுமான கடம்பூர் ராஜு முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார்.

சென்னையில் 13 பேர் ராஜினாமா
முன்னதாக பாஜகவின் சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவை சேர்ந்த 13 பேர் அக்கட்சியில் இருந்து கூண்டாக விலகினர். மாவட்ட தலைவர் அன்பரசு சார்பில் வெளியான அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் முன்னாள் பாஜக ஐடி விங் செயலாளர் நிர்மல் குமார் வழியில் பயணிக்கவுள்ளதாக 13 பேரும் கூட்டாக தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் அனைவரும் அதிமுகவில் இணையலாம் என கூறப்படுகிறது.
-
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
அதிமுக அஸ்திவாரத்தில் கை வைத்த பாஜக.. அமித்ஷா புள்ளி வைக்க.. தினகரன், அன்புமணி கோலம் போட.. என்னாச்சு -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்!












Click it and Unblock the Notifications