தூத்துக்குடியில் டேங்கர் லாரியில் தூங்கிய தொழிலாளி.. தூக்கத்தில் புரண்டு படுத்தவர்.. உயிருடனே இல்லை
தூத்துக்குடி: சிலர் பேருந்துகளுக்கு அடியில் படுத்து உறங்குவது, ரோடு ரோலருக்கு அடியில் அமருவது, லாரிக்கு அடியில் தூங்குவது போன்ற செயல்களை செய்கிறார்கள். இதை டிரைவர்கள் கவனிக்காமல் இயக்கினால் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை அறியாமல், பலரும் இந்த செயல்களை தொடர்ந்து செய்கிறார்கள். அந்த வகையில் தூத்துக்குடி எட்டயபுரத்தில் டேங்கர் லாரிக்கு அடியில் தொழிலாளி படுத்து உறங்கி உள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களுக்கு அடியில் வழிபோக்காக செல்லும் மக்கள் படுத்து உறங்குகிறார்கள். சாலையில் டிரைவர்களுக்கு தெரியாமல் கீழே படுத்து உறங்கும் சிலர், கடைசியில் பரிதாபமாக இறந்து போகிறார்கள். அண்மையில் மதுரையில் ரோடு ரோலருக்கு அடியில் அமர்ந்திருந்த நபர் உயிரிழந்தார்.

மதுரை மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி செலவில், 2.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம் துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி (வயது 28) என்பவர் கட்டிட பொறியாளர் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 5ம் தேதி அன்று காலை பணியில் இருந்த அவர், வெயிலின் தாக்கத்தால் அங்கு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த ரோடு ரோலர் வண்டியின் அடியில் அமர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஆப்ரேட்டர் ரகுமான் அவர் கீழே அமர்ந்திருப்பதை கவனிக்காமல் ரோடு ரோலர் வாகனத்தை இயக்கினார்.
அப்போது திருமண மண்டபத்திலிருந்து ஒலித்த சவுண்ட் ஸ்பீக்கர் பாட்டு சத்தம் காரணமாக மக்கள் கூச்சலிட்டது. அஸ்ஸாம் டிரைவருக்கே கேட்கவில்லை.. இதனால் ரோடு ரோலர் வண்டிக்கு அடியில் படுத்திருந்த சூப்பர்வைசர் கருப்பசாமி தலை நசுங்கி உயிரிழந்தார். கிட்டத்தட்ட அதே பாணியில் தான் தூத்துக்குடி எட்டயபுரத்தில் டேங்கர் லாரிக்கு அடியில் படுத்து உறங்கிய தொழிலாளி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள குமரெட்டியாபுரத்தை சேர்ந்த அழகர்சாமி என்பவருடைய மகன் விநாயகமூர்த்திக்கு 27 வயது ஆகிறது. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் மதுரைக்கு சென்றவர், ஓட்டலில் வேலை முடிந்து இரவு 11 மணிக்கு பஸ்சில் திரும்பி வந்திருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் புறவழிச்சாலையில் பஸ்சிலிருந்து இறங்கிய அவர், சர்வீஸ் சாலையில் நடந்து சென்றிருக்கிறார். அங்கு சாலையோர தடுப்பு சுவரை ஒட்டி மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற ஒரு டேங்கர் லாரியை நிறுத்தி விட்டு, கேபினில் டிரைவர் தூங்கியிருக்கிறார்.
அந்த லாரியை ஒட்டிய சாலையோர தடுப்புச்சுவரில் விநாயகமூர்த்தி படுத்து உறங்கி உள்ளார். சிறிது நேரத்தில் தடுப்புச்சுவரில் இருந்து டேங்கர் லாரிக்கு கீழ் தவறி விழுந்தார். ஆனால், அப்படியே அவர் அங்கேயே படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். நேற்று அதிகாலையில் தூங்கி எழுந்த டிரைவர் மதுரைக்கு புறப்பட்டார். அவர் லாரியை சர்வீஸ் சாலையில் இருந்து ஓட்டியபோது, சக்கரம் தூங்கி கொண்டிருந்த விநாயகமூர்த்தி மீது ஏறி இறங்கியுள்ளது.
சக்கரத்தில் சிக்கிய விநாயகமூர்த்தி அலறியுள்ளார். இந்த சத்தத்தை கேட்ட டிரைவர், அதிர்ச்சியுடன் லாரியை நிறுத்திவிட்டு பின்னால் சென்று பார்த்துள்ளார். அங்கு லாரி சக்கரத்துக்கு அடியில் உடல் நசுங்கிய நிலையில் விநாயகமூர்த்தி உயிரிழந்து கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரி டிரைவரான வாசுதேவநல்லூரைச் சேர்ந்த செல்வமுருகன் (41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications