தூத்துக்குடி கடலில் மாயமான 2 சிறுவர்கள் சடலமாக மீட்பு! பைபர் படகில் சென்ற போது விபரீதம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியில் உள்ள கடலில் மாயமான 2 சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடற்கரையை சுற்றி பார்க்க படகில் சென்றவர்களுக்கு நேர்ந்த கதியை நினைத்து அப்பகுதி மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

தருவைக்குளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சேவியர் என்பவரின் மகன் ஜோஸ்வா, மனோஜ் உள்ளிட்ட 7 சிறுவர்கள் நேற்று பிற்பகலில் ஒரு பைபர் படகில் கடலை சுற்றி பார்க்க திட்டமிட்டு கடற்கரைக்கு வந்தனர்.

Tuticorin accident

இவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கிறார்கள். குறிப்பிட்ட தொலைவுக்கு இவர்களது படகு சென்றதும் என்ஜின் பழுது காரணமாக இந்த படகு நின்றுவிட்டதாம்.

அப்போது அந்த 7 சிறுவர்களில் 4 பேர் கடலில் குதித்து நீந்தி வெளியே சென்று ஊர்மக்களை அழைத்து வந்து மற்றவர்களை மீட்க திட்டமிட்டிருந்தனர். அந்த வகையில் முதலில் இரண்டு பேரும் அடுத்து 2 பேரும் கடலில் குதித்தனர். அப்போது அவர்கள் 4 பேரும் கடலில் மூழ்கியதை அறிந்த மற்ற 3 பேரில் ஒருவர் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து கரையில் இருந்த சிறுவர்களின் தந்தை வேறொரு பைபர் படகை எடுத்துக் கொண்டு வேகமாக வந்து கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இருவரை மீட்டார். இதையடுத்து மற்ற இருவரை மீட்கும் முயற்சியின் போது அவர்கள் மூழ்கினர். இதனால் படகில் இருந்த மூவரையும் அந்த படகுடன் கொண்டு வந்து கரை சேர்த்தார்.

இதையடுத்து அவர் திரும்பி வந்து கடலில் மூழ்கிய சிறுவர்களை நேற்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை தேடி பார்த்தனர். இதையடுத்து அந்த பகுதி இருண்டு விட்டதால் அந்த சிறுவர்களை கண்டுபிடிக்க முடியாமல் கரை திரும்பிவிட்டார்.

இதையடுத்து இன்று காலை 4 மணிக்கு அந்த இரு சிறுவர்களையும் தேடும் பணியை 8 பைபர் படகுகளில் சென்ற மீனவர்கள் தொடங்கினர். இதில் காலை 7 மணிக்கு இரு சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தருவைக்குளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலை சுற்றி பார்க்க 7 சிறுவர்கள் சென்ற நிலையில் அதில் 2 பேர் கடலில் நீந்தி வர முயற்சித்து கரை திரும்ப முடியாமல் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+