அத்தையின் தொகுதியில்! முட்டி அளவு வெள்ளத்தில் உதயநிதி! எடப்பாடி குறித்த கேள்விக்கு தந்தாரே ரியாக்ஷன்
தூத்துக்குடி: நாங்க என்ன ஊர் சுற்றி பார்க்கவா வந்திருக்கோம் என முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத மழைபெய்துள்ளது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் வந்துவிட்டது. தூத்துக்குடியில் பாயும் தாமிரபரணி அதன் அதிகமான நீர் மட்டத்தை எட்டியதை அடுத்து பாதுகாப்பு காரணமாக அங்கிருந்து 50 ஆயிரம் கனஅடி முதல் 1 லட்சம் கன அடி வரை நீர் வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில் தூத்துக்குடியில் திமுக எம்பி கனிமொழி மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். இந்திய கடலோர காவல் படையினருடன் ஆலோசனை நடத்தி எந்த இடத்தில் மீட்பு பணிகள் உடனடியாக செய்யப்பட வேண்டும். எங்கு தண்ணீர் அதிகம் சூழ்ந்துள்ளது என்பதை விளக்கி வருகிறார்.
அது போல் முட்டி அளவு தண்ணீரில் அசால்ட்டாக இறங்கி நடந்து மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணங்களை வழங்கி வருகிறார். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி நேற்று முன் தினம் முதல் நெல்லையில் மீட்பு பணிகளை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து இன்றைய தினம் அவர் தூத்துக்குடி வருகை தந்துள்ளார்.
வெள்ளப்பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள் கீதா ஜீவன், கேஎன்.நேரு, ராஜகண்ணப்பன் ஆகியோர் விளக்கினர். இதையடுத்து அவர் முட்டிக்கு மேல் இருக்கும் நீரில் நடந்து சென்று ஆய்வு நடத்தி மீட்பு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்துள்ள முத்தாலம்மன் காலனி, ஸ்டேட் பேங்க் காலனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களை மீட்கின்ற பணிகளை முடுக்கிவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துள்ள வரலாறு காணாத கனமழை காரணமாக, வெள்ளம் சூழ்ந்துள்ள முத்தாலம்மன் காலனி, ஸ்டேட் பேங்க் காலனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களை மீட்கின்ற பணிகளை மாண்புமிகு அமைச்சர்கள் - அதிகாரிகள் - அலுவலர்களுடன் இணைந்து இன்று ஒருங்கிணைத்தோம்.
— Udhay (@Udhaystalin) December 19, 2023
காவல்துறை -… pic.twitter.com/UJJNyqd8P1
இந்த நிலையில் அவர் படகில் சென்றும் வெள்ளம் பாதித்த பணிகளை ஆய்வு செய்திருந்தார். இந்த நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் எடப்பாடி பழனிசாமி வெள்ள மீட்பு பணிகள் சரியாக செய்யப்படவில்லை என கூறுகிறாரே என்ற கேள்விக்கு உதயநிதி கொந்தளித்துவிட்டார்.
முதலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி என சொல்லும் போதே அவர் குறித்த கேள்வி எல்லாம் வேண்டாம் என்பது போல் தலையை செய்கை காட்டினார். பிறகு அந்த நிருபர் கேட்டதும், இப்ப என்ன பண்ணிகிட்டு இருக்கோம். நான் என்ன ஊர் சுத்தி பார்க்கவா வந்திருக்கேன்.
இது வரலாறு காணாத மழை என்கிறார்கள். பெருமழை, இயற்கை பேரிடர், எங்களால் முடிந்த அளவுக்கு நாங்கள் பணியாற்றிகிட்டுத்தான் இருக்கிறோம். படகுகள் மூலம் மீட்பு பணிகள் நடத்தப்பட்டுத்தான் வருகிறது. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் என எல்லோரும் வேலை செய்கிறார்கள் என்றார். இந்த நிலையில் நாளை காலை தூத்துக்குடிக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கிறார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications