பணத்துக்காக இப்படியும் சில மனிதர்கள்! யூடியூபில் ஆடு விற்று நடுரோட்டில் நின்ற பெருமாள்! பரிதாபக்கதை!
தூத்துக்குடி: யூடியூப் மூலம் ஆடு விற்பனை செய்த தூத்துக்குடியை சேர்ந்த வியாபாரி ஒருவரை, வேலூரை சேர்ந்த முன் பின் தெரியாத நபர் ஒருவர் ஆடுகளை வாங்குவது போல் நடித்து நம்ப வைத்து ஏமாற்றிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.
யூடியூப் ஆடு வியாபாரி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். ஆடு வியாபாரியான இவர் ஆடுகளை வீடியோ எடுத்து அதனை யூடியூப்பில் பதிவேற்றம் செய்து விற்பனை செய்து வருவதுடன் ஆடு தேவைப்படுவோர் தன்னை அழைக்கலாம் எனக் கூறி அலைபேசி எண்ணையும் பகிர்ந்து விளம்பரம் செய்திருக்கிறார்.

36 ஆடுகள்: இதனை பார்த்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பெருமாளை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி தனக்கு 36 ஆடுகள் உடனடியாக தேவைப்படுவதாகவும் ஆடுகளை வேனில் ஏற்றிக் கொண்டு வந்தால் கையோடு காசை வாங்கிக் கொள்ளலாம் என வலை விரித்திருக்கிறார். தன்னை நூதனை முறையில் ஏமாற்ற நடக்கும் திட்டம் தெரியாமல், ஆடுகளுடன் வேனில் வேலூர் சென்ற பெருமாளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பாகாயம் அருகே வேனுடன் தயாராக நின்று கொண்டிருந்த மோசடி பேர்வழி, பெருமாள் கொண்டு சென்ற ஆடுகளை வேகவேகமாக தனது வேனுக்கு மாற்றியிருக்கிறார். ஆம்பூருக்கு ஆடுகளை கொண்டு சென்று விட்டுவிட்டு பணம் எடுத்து வருவதாக தெரிவித்திருக்கிறார். அப்போதாவது யூடியூப் ஆடு வியாபாரி பெருமாள் சுதாரித்திருக்க வேண்டும்.
நடுரோட்டில் தவிப்பு: ஆனால் உச்சம் பார்க்காமல் ஆடுகளை வாங்கிக் கொண்டாரே என்ற குஷியில் பணம் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் முன் பின் தெரியாத ஊரில் நடுரோட்டில் நின்றிருக்கிறார் பெருமாள். சிறிது நேரத்தில் தன்னிடம் ஆடுகளை வாங்கிச் சென்ற நபரின் செல்போன் சுவிட்ச் ஆஃப். அப்போது தான் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெருமாள் பதறியடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
காவல்துறையினர் நடத்திய துரித தேடுதல் வேட்டையில் குடியாத்தம் அருகே ஆடுகளுடன் வேன் நிற்பது கண்டறியப்பட்டு ஆடுகள் மீட்கப்பட்டது. காவல்துறையினருக்கு பெரிய கும்பிடு ஒன்று போட்டுவிட்டு ஆடுகளுடன் வந்த வேனிலேயே மீண்டும் ஊர் திரும்பிவிட்டார் பெருமாள்.
பெரும் வியாபாரம் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துவிடலாம் என முன் பின் தெரியாத நபரின் அழைப்பை ஏற்றுச் சென்று கடைசியில் வேன் வாடகையாக கைகாசை இழந்தது தான் மிச்சம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications