இன்னும் 3 மாதம்தான்.. தூத்துக்குடியில் நடக்க போகும் தரமான சம்பவம்.. சிட்டியையே மாற்ற போகுது

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் வின்பாஸ்ட் தொழிற்சாலையின் கட்டுமானம் முடிந்து உள்ளது. இன்னும் 3 மாதங்கள் அங்கே உற்பத்தி தொடங்க உள்ளது. அங்கே மேற்கொள்ளப்படும் இந்த உற்பத்தி இன்னும் 3 மாதங்களில் சிட்டியையே மாற்ற போகிறது. அங்கே மேலும் முதலீடுகள் வருவதற்கு காரணமாக அமைய போகிறது.

வெளிப்புற கட்டுமானம் 100% முடிந்த நிலையில்.. உட்புறம் மெஷின்களை பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த வருடம்தான் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் அனைத்து அனுமதிகளை முடிந்து தளம், மற்றும் கூரை அமைக்கும் பணிகள் முடிந்ததோடு.. உள்ளே மெஷின்களை நிறுவும் பணிகளும் நடக்கின்றன.

Tuticorin

தூத்துக்குடி கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி தொழிற்சாலைகளின் கிளஸ்டராக மாற தொடங்கி உள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் ரிப்போர்ட் ஒன்றும் கூட அதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப்பாக தூத்துக்குடி மாற தொடங்கி உள்ளது.

ACME - 52,000 கோடி
பெட்ரோனாஸ் - 34,000 கோடி
செம்பிகார்ப் (இன்று) - 36,238 கோடிகள்
லீப் கிரீன் எனர்ஜி (இன்று)- 22,842 கோடிகள்
என்டிபிசி ஆகியவை முதலீடு செய்துள்ளனர். இந்திய அரசு ஏற்கனவே VOC துறைமுகத்தை ஹைட்ரஜன் சேமிப்பு மையமாக அறிவித்துள்ளது.

தூத்துக்குடி சாதனை: சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில்தான் மாநிலத்திலேயே அதிக சிப்காட் தொழில் பூங்காக்கள் இருக்கும். சென்னையில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஏக்கருக்கு சிப்காட் உள்ளது .

1. தூத்துக்குடி Ph-1 & 2 : 2509 ஏக்கர் (தற்போது உள்ளது)
2. வைப்பார்: 1,020
3. சிலாநாதம்: 394
4. அல்லிகுளம்: 2,234
5. வேம்பூர்: 2,814
6. இ.வேலாயுதபுரம் : 355
7. மரச்சாமான்கள் பூங்கா : 1,100 ஏக்கர்
🇻🇳சிலாநத்தம் சிப்காட்டில் வின்ஃபாஸ்ட் வர வாய்ப்புள்ளது. வரவிருக்கும் அற்புதமான காலங்கள்

வின்பாஸ்ட்: இது போக சென்னைக்கு வர இருந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் கட்டுமானத்தை மேற்கொண்டு வருகிறது. டெஸ்லாவிற்கு போட்டியாக இருக்கும் வின்பாஸ்ட் நிறுவனம்தான் தமிழ்நாட்டிற்கு வந்து உள்ளதாக செய்திகள் வருகின்றன. வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்பது வியட்நாமை தளமாகக் கொண்ட ஒரு வாகன நிறுவனமாகும் இது வியட்நாமின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும்.

அருகருகே வருகின்றன: தூத்துக்குடியில் திங்கள் முதல் வின்பாஸ்ட் தொழிற்சாலையின் கட்டுமானம் தொடங்க உள்ளது. இந்த இடத்திற்கு அருகிலேயே தூத்துக்குடி சிப்காட்டில் அமையும் சர்வதேச பர்னிச்சர் பார்க் அமைக்கப்பட உள்ளது.

இப்போது இ வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கிறது. மின்சார கார்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் போன்ற மின்சார வாகனங்களை (EV) தயாரிப்பதில் விரிவடையும் முதல் கார் பிராண்டாகும். உலகின் நம்பர் 1 பிராண்ட் இதுதான். இந்த நிறுவனம்தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. அதுவும் தூத்துக்குடிக்கு தேடி வந்துள்ளது.

கிளஸ்டர்: இந்திய நிலையில் தூத்துக்குடி கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, ஓசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி ஆட்டோமொபைல் கிளஸ்டராக மாற தொடங்கி உள்ளது என்று தமிழ்நாடு கைடன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 1 வருடத்தில் ஏகப்பட்ட முதலீடுகள் குவிந்து உள்ளன. சென்னை, ஓசூருக்கு அடுத்ததாக தூத்துக்குடி மிக வேகமாக முன்னேறி வருகிறது. கடந்த 1 வருடத்தில் தூத்துக்குடிக்கு 1,40,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்கள் கிடைத்துள்ளன. மொத்த தமிழ்நாடு மாநிலத்தை பசுமையான ஹைட்ரஜன் மையமாக மாற்ற தூத்துக்குடி மையமாக மாறி உள்ளது.

தமிழ்நாடு இப்போது இ வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கிறது. மின்சார கார்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் போன்ற மின்சார வாகனங்களை (EV) தயாரிப்பதில் விரிவடையும் முதல் கார் பிராண்டாகும். உலகின் நம்பர் 1 பிராண்ட் இதுதான். அதுவும் தூத்துக்குடிக்கு தேடி வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+