டிசைன் டிசைனா யோசிக்குறாங்க.. திருச்செந்தூர் முருகன் கோவிலில் புது மோசடி! அதென்ன எஸ்எம்எஸ் தரிசனம்?
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு திரிசுதந்திரர்கள் கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் 'முக்கிய பிரமுகர்களிடம்' பணம் கொடுத்தால் உடனே தரிசனத்துக்கு அழைத்துச் செல்லும் எஸ்எம்எஸ் தரிசனமும் அமலில் இருப்பதாக கூறுகின்றனர் பக்தர்கள்.
"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்" என்பார்கள். இப்படி மலைப்பகுதிகளில் தனது கோயில்களை அமைத்துக் கொண்ட முருகப்பெருமான் விதிவிலக்காக கடற்கரையில் குடி கொண்டிருக்கும் அற்புத ஆலயம்தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி வழிபாட்டை முடித்துவிட்டு வெளியே வரும்போது உயர உயர போகும் வகையில் பாதை அமைந்துள்ளது. செந்தூர் வேலனை கும்பிட்டவருக்கு இனி வாழ்வில் ஏற்றம்தான் என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த நடைபாதை.

அறுபடை வீடுகளில், இரண்டாம் படைவீடான, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகனை வழிபடுவதன் மூலம், திருமண தடை நீங்கும், தொழில் அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை. மேலும், வைகாசி விசாகத்திற்கு விரதமிருந்து திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசித்து விட்டு மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யும் சிறப்பு வழக்கமும் இந்த தலத்தின் தனிச் சிறப்பு.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தரிசனத்திற்காக பக்தர்கள் வருகின்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்ய 250 ரூபாய் சிறப்பு தரிசனமும், 100 ரூபாய் மற்றும் 20 ரூபாய் கட்டணம் தரிசனமும், பொது தரிசனமும் நடைமுறையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு, விஐபி தரிசனத்தை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. தற்போது 100 ரூபாய் கட்டண தரிசனமும், பொது தரிசனமும் மட்டுமே நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், கோவிலில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக பணிகள் நடந்து வருவதால் தரிசன முறையில் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகிறது. தற்போது பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் கோவிலில் பொது தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்கும் நிலையை மாற்ற புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு அங்கு பக்தர்களை தங்க வைத்து குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த பெருந்திட்ட வளாக பணிகளால் திருச்செந்தூர் கோவில் திருப்பதிக்கு நிகராக மாறி வருகிறது.
ஆனால் கோவிலில் பூஜைகள் செய்து வரும் திரிசுதந்திரர்களால் ஏழை எளிய மக்கள் தரிசனம் செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு நபருக்கு ஆயிரம் முதல் 10 ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு திரிசுதந்திரர்கள் சுவாமி தரிசனம் செய்ய அழைத்துச் செல்கின்றனர். இதனால் பொது தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசன வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய தினம்தோறும் 3 மணி நேரம் முதல் 7 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருக்கும் நிலை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் திருச்செந்தூர் கோவிலில் நேற்றைய தினம் கோவிலுக்கு வருகை தந்த குடும்பத்தினரிடம் திரிசுதந்திரர்கள் பணம் பெற்றுக் கொண்டு கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது மட்டுமல்லாமல் எஸ்எம்எஸ் தரிசனம் என்ற முறைகேடும் நடைபெறுவதாக பக்தர்கள் புகார் கூறுகின்றனர். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கோவில் தக்கார் மற்றும் அதிகாரிகளின் உறவினர்களுக்கு அவர்கள் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது. அந்த எஸ்எம்எஸ்-ஐ கோவில் பணியாளர்களிடம் காட்டினால், அவர்களுக்கு தரிசனத்திற்கு எந்தவித பிரச்சனையும் இன்றி அனுமதி கிடைக்கிறது. அது மட்டும் அல்லாமல் குறிப்பிட்ட தொகையை பணமாகச் செலுத்தினால், பணம் செலுத்தியவர்கள் செல்போனுக்கு அவர்கள் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி வைக்கிறார்கள்.
அதனையும் கோயிலில் காட்டினால் எந்தவித வரிசையிலும் நிற்காமல் எளிதாகச் சென்று தரிசனம் செய்யலாம். இது நீண்ட காலமாகவே நடந்து வருவதாகவும், இதன் காரணமாக பொது தரிசன வழியில் வருபவர்கள், முதியோர்கள், ஊனமுற்றோர், 100 ரூபாய் தரிசனத்தில் வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக தற்போது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. முக்கிய பிரமுகர்கள், பத்திரிக்கையாளர்கள் தரிசனம் செய்யவே குறுஞ்செய்தி முறை கடைபிடிக்கப்படுவதாகவும் இதில் பணம் வசூல் செய்யப்படுவதில்லை என கூறுகின்றார் கோவில் நிர்வாகிகள்.
திருச்செந்தூர் கோவிலில் இதுபோல ஏதாவது ஒரு முறைகேட்டால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை கமெண்ட் செய்யலாம்..
-
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் ரமேஷிடம் ரூ 1000 வாங்கிய அர்ச்சகர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில்! அமைச்சரிடமே ரூ 4000 பெற்று அர்ச்சகர்கள் முறைகேடு! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
திருச்செந்தூரில் அமைச்சரிடம் பணம் வாங்கிய அர்ச்சகர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு.. போலீஸ் அதிரடி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications