Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனித "தலை"யை கையோடு எடுத்து.. மிரள வைத்த இளைஞர்.. முறிந்த காதலால் விபரீதம்.. தூத்துக்குடியில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: காதல் தோல்வி காரணமாக இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக 22 வயது இளைஞரை கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ளது குமாரகிரிபுதூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் சுப்புராஜ்.. இவரது மகன் சூரியராகவன்.. 31 வயதாகிறது.

இவர் டிவி பழுதுபார்க்கும் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.. இந்நிலையில் நேற்றைய தினம் கடையில் வழக்கம்போல் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, திடீரென கடைக்குள் ஒரு மர்ம நபர் புகுந்தார்..

 தலை துண்டிப்பு

தலை துண்டிப்பு

சுப்புராஜிடம் ஆவேசமாக சண்டை போட்டார்.. வாக்குவாதம் செய்தார்.. இறுதியில் கையோடு கொண்டு வந்திருந்த கத்தியால் சூரிய ராகவன் தலையை துண்டித்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று சூரியராகவன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையையும் துவக்கினர்.

 சூரியராகவன்

சூரியராகவன்

அப்போதுதான் ஆனந்தராஜ் என்பவர் பெயர் அடிபட்டது.. 22 வயதான இவர், சோழபுரத்தினை சேர்ந்தவர்... உயிரிழந்த சூரியராகவனுக்கு மகாலட்சுமி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது... சூரிய ராகவனின் மெக்கானிக் கடை அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ளது.. அதற்கு பக்கத்திலேயே டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் உள்ளது.. அப்போதுதான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது... இந்த காதல் விவகாரம் இரு வீட்டினருக்கும் தெரிந்துவிட்டது.. இருவருமே வேறு வேறு சாதி என்பதால், வீடுகளில் எதிர்ப்பு கிளம்பியது.

பெற்றோர்கள்

பெற்றோர்கள்

இதனால், காதலர்கள் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்... இப்போது சூரிய ராகவனை கொன்ற ஆனந்த்ராஜ் மகாலட்சுமியை ஒருதலையாக காதலித்தவர்.. கேட்டரிங் வேலை செய்து வருகிறார்.. மகாலெட்சுமி சூரியராகவனை காதலிப்பது தெரிந்ததுமே, ஆத்திரம் வந்துள்ளது.. இன்னொரு சமூகத்தினரான சூரியராகவனை, மகாலட்சுமி காதலிப்பதை ஆனந்தராஜால் ஏற்க முடியவிலை.. இவர்களின் காதலை பிரிக்க பல வழிகளை கையாண்டு வந்துள்ளார்.

கொலை

கொலை

இப்படிப்பட்ட சூழலில்தான் காதலர்கள் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.. இது ஆனந்தராஜுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தவும், சூரியராகவனை கொலை செய்ய முடிவு செய்தார்.. இதற்காக ஒரு டிவியை கொண்டு வந்து, அதை ரிப்பேர் செய்து தருமாறு, ஒரு வாரத்திற்கு முன்பு சூரியராகவன் கடைக்கு வந்து தந்துவிட்டு போனார்.. அப்போதே டிவி ரிப்பேர் ஆக 4, 5 நாள் ஆகும் என்று சொல்லி உள்ளனர்.. ஆனாலும், தினமும் கடைக்கு வந்து, டிவி ரெடியா? என்று சூரிய ராகவனிடம் ஆனந்த்ராஜ் கேட்டு வந்துள்ளார்.

 சூரியராகவன்

சூரியராகவன்

நேற்றுமுன்தினம் தான் டிவி சரி செய்யப்பட்டுள்ளது.. உடனே ஆனந்தராஜுக்கு போன் செய்த சூரியராகவன், டிவி ரெடியாகிவிட்டது.. நாளை வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.. அதன்படி நேற்றைய தினம் கடைக்கு செல்லும்போது, கையில் ஒரு கத்தியை கொண்டு சென்றுள்ளார் ஆனந்தராஜ்.. அது ஆடு வெட்டும் கத்தியாம்... போலீசில் சிக்கி விடக்கூடாது என்று மிளகாய் பொடியையும் கொண்டு போயுள்ளார்.

 காதல் கதை

காதல் கதை

கடைக்குள் நுழைந்ததுமே டிவி பற்றி பேசாமல், மகாலட்சுமி காதல் கதையை எடுத்துள்ளார்.. வேறு சாதியை சேர்ந்த நீ எப்படி, மகாலட்சுமியை திருமணம் செய்யலாம்? என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.. இதுதான் வாக்குவாதமாக வெடித்துள்ளது.. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த ஆனந்தராஜ், கையில் கொண்டு வந்திருந்த மிளாகாய் பொடியை சூரிய ராகவன் முகத்தில் வீசிவிட்டு, கத்தியால் அவரது தலையை வெட்டி துண்டித்துவிட்டார்.. பிறகு தலையை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு, கடைக்கு வெளியே வந்துள்ளார்..

 வாக்குமூலம்

வாக்குமூலம்

யாரும் தன்னை பார்க்கவில்லை என்பதை அறிந்துகொண்டு, அதன்பிறகு அந்த தலையை சாலையோரம் வீசிவிட்டு தப்பி சென்றுள்ளார்... இத்தனையையும் போலீசாரிடம் வாக்குமூலமாக ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.. இதையடுத்து, இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், தப்பிச் சென்ற மகாலட்சுமியும் ஆனந்தராஜை காதலித்து வந்துள்ளார்.. ஆனால், ஒருகட்டத்தில் வேலைக்கு துபாய்க்கு ஆனந்தராஜ் சென்றுவிடவும்தான், 2வதாக சூரியராகவனை காதலித்து வந்துள்ளார்.

 கொலையாளி

கொலையாளி

காதலி இன்னொரு நபரை காதலித்ததுதான் ஆனந்தராஜை கொலை செய்யும் அளவுக்கு கொண்டுபோய் விட்டதாக கூறப்படுகிறது.. ஆனால், கொலையாளியை திருச்செந்தூரில் வைத்து வெறும் 4 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துவிட்டனர்.. ஒரு பெண் 2 நபர்களை காதலித்ததால் ஏற்பட்ட விபரீதம், சாதி மறுப்பு திருமணம்,காதல் தோல்வி என மொத்தமாக சேர்ந்து ஒரு இளைஞரை காவு வாங்கிவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+