தவெகவிற்கு அரோகரா.. விஜய்க்கு அரோகரா.. திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் வீடியோ எடுத்து ரீல்ஸ் போட்ட இளைஞர்
திருச்செந்தூர்: விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே அவரது ரசிகர்கள் இடம், பொருள் எதுவும் பார்க்காமல் போகிற இடமெல்லாம் தவெகவிற்கு ஆதரவாக கோஷம் போடுவதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் விஜய் ரசிகர் ஒருவர் டிவிகேவுக்கு அரோகரா.. விஜய்க்கு அரோகரா என கோஷம் எழுப்பியது மட்டும் இன்றி அதனை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.
இதுமட்டும் இல்லாமல் வரும் தேர்தலில் விஜய்க்கு ஓட்டு போட வேண்டும் என்று கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார். இந்த வீடியோ காட்சியை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில், அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன.

விஜய்க்கே தர்மசங்கடம்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பை நடத்தி வரும் விஜய், ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆனதும் தேர்தல் பிரச்சார பணிகளில் இன்னும் வேகம் காட்ட இருப்பதாக சொல்லப்படுகிறது.
விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே அவரது ரசிகர்கள் இடம், பொருள் எதுவும் பார்க்காமல் போகிற இடமெல்லாம் தவெகவிற்கு ஆதரவாக கோஷம் போடுவதையும் பார்க்க முடிகிறது. விஜய் ரசிகர்களின் இந்த வரம்பு மீறிய செயல்கள் சில நேரம் விஜய்க்கே தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்தில், மலேசியாவில் ஜனநாயகன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தவெக சார்ந்த கட்சி அடையாளங்கள் எதையும் வெளிப்படுத்தக் கூடாது என்று மலேசிய போலீஸ் கண்டிப்பான உத்தரவு போட்டு இருந்தது. அத்தனை கெடுபிடிகளையும் தாண்டி, இசை வெளியீட்டு விழா நடைபெற்ற மைதானத்திற்குள் தவெக கொடியை காட்டி இளைஞர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து, அவரை மலேசிய போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள்
அதேபோல, விஜய் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் மலேசிய இசை வெளியீட்டு விழாவின் போது ரசிகர்கள் "தவெக... தவெக..." என கோஷம் போட்டனர். அப்போது விஜய்யும் "இங்கு வேண்டாம்" என்று சைகை காட்டி ரசிகர்களை கட்டுப்படுத்தினார்.
இப்படி, விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்ற பெயரில் பலருக்கும் தர்மசங்கடத்தையும் இடையூறும் ஏற்படுத்தும் விதமாக விஜய் ரசிகர்கள் நடந்து கொள்ளும் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இந்த நிலையில்தான் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் விஜய் ரசிகர் ஒருவர் பக்தர்களிடம் விஜய்க்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்டு வீடியோ வெளியிட்டது வைரலாகி வருகிறது.
தளபதி விஜய்க்கு அரோகரா
திருச்செந்தூர் கோயில் வளாகத்திற்குள் வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோயிலுக்குள் "தளபதி விஜய்க்கு அரோகரா... தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரோகரா" என தவெக தொண்டர்கள் சிலர் கோஷம் எழுப்பினர். மேலும், "அடுத்த வருடம் அறநிலையத் துறையை டேக் ஓவர் செய்து, பாஸ் வழங்குவோம். இந்த மாதிரி வரிசையில் நிற்க அவசியமில்லை" எனக் கூறி விஜய்யின் புகைப்படத்தை காட்டி பக்தர்களிடம் இளைஞர்கள் வாக்கு சேகரித்தனர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இந்தக் காட்சிகளை ரீல்ஸாகவும் பதிவிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் இந்தக் காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், கோயிலுக்குள் வீடியோ எடுத்து பக்தர்களுக்கு இடையூறாக நடந்து கொண்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலையத் துறைக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
-
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
முதல்வர் விஜய்யை சுற்றி தலைமை செயலகத்தில் 4 பவர் சென்டர்கள்.. முன்னாள் அமைச்சர் உதயக்குமார் புகார் -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம் -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்!












Click it and Unblock the Notifications