நீ தப்பு பண்ணிட்டே.. என்னை தனியா கூப்பிட்டு பேசியிருக்கணும்.. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல்
திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இளைஞர் மிரட்டல் விடுத்துள்ளார்
Recommended Video
தூத்துக்குடி: "நீ ஒரு தப்பு பண்ணிடே அனிதா ராதாகிருஷ்ணன்.. என்னை தனியா கூப்பிட்டு பேசியிருக்கணும்.. உன் 18 வருஷ மொத்த தப்பையும் வெளியிடுவேன்" என்று திருச்செந்தூர் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இளைஞர் ஒருவர் பகிரங்கமாக பேஸ்புக்கில் மிரட்டல் விடுத்துள்ளார்.
அரசியலில் பழுத்த அனுபவம் கொண்டவர் மூத்த தலைவர் அனிதா ராதாகிருஷ்ணன்... 2001-ம் ஆண்டிலிருந்து திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.. 4 முறை எம்எல்ஏவாக இருப்பவர்.
அதிமுகவில் அமைச்சராக இருந்த அவர், பின்னாளில் திமுகவில் சேர்ந்து, இப்போது அக் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். அதிமுக, திமுக என எந்த கட்சியில் இவர் இருந்தாலும், இவருக்கென்று மக்கள் ஆதரவு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.

பேஸ்புக் மீம்
இந்நிலையில், திமுக எம்எல்ஏவான அனிதா ராதாகிருஷ்ணனை விமர்சித்து மணிகண்டன் என்பவர், தன்னுடைய "தீபிகா மணிகண்டன்" என்ற பேஸ்புக்கில் மீம் ஒன்றை உருவாக்கி பதிவு போட்டிருந்தார்.. மணிகண்டன் திருச்செந்தூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் ஆவார்.. இரவு 1 மணிக்கு அந்த பதிவினை அவர் பேஸ்புக்கில் போஸ்ட் செய்துள்ளார்.. ஆனால், விடிகாலை 5 மணிக்கே அனிதா ராதாகிருஷணின் ஆட்கள் மணிகண்டனின் வீட்டிற்குச் சென்று மணிகண்டனையும் குடும்பத்தினரையும் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

தப்பு பண்ணிட்டே
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மணிகண்டன் திரும்பவும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அனிதா ராதாகிருஷ்ணனை நேரடியாக தாக்கி பேசியுள்ளார். "ராத்திரி 1 மணிக்கு ஒரு மீம் போட்டேன்.. ஆனால் பதறியடிச்சிட்டு என் வீட்டுக்கு காலைல 5 மணிக்கு ஆள் அனுப்பி என் அம்மா, அப்பாவை மிரட்டியிருக்கே.. நீ ஒரு தப்பு பண்ணிட்டே அனிதா ராதாகிருஷ்ணன்.. நீ என்னை தனியா கூப்பிட்டு பேசியிருக்கணும்.

மிரட்டல்
அதை விட்டுட்டு என் வீட்டுல வந்து எல்லாரையும் மிரட்டி பயம் காட்டியிருக்கே.. இந்த 18 வருஷத்துல நீ செய்த அத்தனை அயோக்கியத் தனங்கள் குறித்தும் என்கிட்ட ஆதாரங்கள் இருக்கு.. அதை நான் வெளியிடுவேன்" என்று மிரட்டல் விடுத்துள்ளார்.. மேலும் இந்த வீடியோவில் ஆபாச வார்த்தைகளை சொல்லியும் அனிதா ராதாகிருஷ்ணனை அந்த இளைஞர் சரமாரி மிரட்டி உள்ளார்.

தலைமறைவு
இந்த வீடியோ திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதிகளில் வைரலாகி வருகிறது.. ஆனால் மணிகண்டனை காணவில்லை.. எங்கு தலைமறைவாக உள்ளார் என்று தெரியவில்லை. தற்போது எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அத்துடன் இந்த சம்பவமும் திமுக தரப்பில் பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications