டிவிஎஸ் எமரால்ட்- கொலம்பியா பசிபிக் குழுமத்தின் சீனியர் லிவிங் ப்ராஜெக்ட்.. சென்னையில் அறிமுகம்
சென்னை: சென்னையில் ‛சீனியர் லிவிங் ப்ராஜெக்ட்' மூலம் சர்வதேச தரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்ட டிவிஎஸ் எமரால்ட் ஹேவன் ரியால்ட்டி லிமிடெட் (டிவிஎஸ் எமரால்ட்) நிறுவனம் கொலம்பியா பசிபிக் குழுமத்துடன் (சிபிசி) இணைந்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கியம்சம் பற்றியும், திட்டம் பற்றி டிவிஎஸ் எமரால்ட் தலைவரும், தலைமை நிர்வாகி அதிகாரியுமான ஸ்ரீராம் ஐயர் தெரிவித்துள்ளதும் பின்வருமாறு:
தமிழ்நாடு உள்பட வெளிமாநிலங்களில் குடியிருப்பு கட்டுமானம் மற்றும் விற்பனையில் டிவிஎஸ் எமரால்டு ஹேவன் ரியால்ட்டி லிமிடெட் நிறுவனம் (டிவிஎஸ் எமரால்ட்) மற்றும் கொலம்பியா பசிபிக் குழுமம் (சிபிசி) சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த 2 நிறுவனங்களும் இணைந்து சென்னையில் 2.7 ஏக்கர் பரப்பளவில் சீனியர் லிவிங் ப்ராஜெக்ட் திட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதற்காக ரூ.175 கோடி முதலீட்டில் சென்னை தையூரில் திட்டம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை தையூரில் சிங்கிள் மற்றும் இரண்டு படுக்கையறையுடன் கூடிய 250 குடியிருப்புகளை உருவாக்குகிறது. மேலும் 3 பெட்ரூம் கொண்ட வீட்டை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2024ல் தொடங்கி 4 முதல் 5 ஆண்டுகளில் முழுமையாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கொலம்பியா பசிக்கு குழுமம் குடியிருப்புகளின் சேவையை வழங்கும். டிவிஎஸ் எமரால்டு குடியிருப்பை மேற்பார்வை செய்யும் பணியை செய்ய உள்ளது. அதோடு ஒவ்வொரு அப்பார்ட்மெண்ட்டின் விலையும் ரூ.40 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை இருக்கும் என கணிக்க்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே கொலம்பியா பசிபிக் குழுமம் சீனியர் லிவிங் ப்ராஜெக்ட்டில் 2 திட்டங்களை செயல்படுத்திய நிலையில் டிவிஎஸ் எமரால்ட்டுக்கு இதுதான் முதல் திட்டமாகும்.
இந்த திட்டத்தின் கீழ் முதியவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட உள்ளது. உணவகம், பிரத்யேக உடற்பயிற்சி கூடம், உள்விளையாட்டு அரங்கம், ஸ்பா உடன் கூடிய சலூன், சர்வதேச தரத்திலான பிற அடிப்படை வசதிகள் செய்து வழங்கப்படும். மேலும் உணவு, வீட்டு பராமரிப்புக்கான வசதிகளும், 24 மணி நேர மருத்துவ உதவி கிடைக்கும் வகையிலும் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளது.
இதுபற்றி டிவிஎஸ் எமரால்ட் தலைவரும், தலைமை நிர்வாகி அதிகாரியுமான ஸ்ரீராம் ஐயர் கூறுகையில், ‛‛சென்னையில் உலகத்ததரம் வாய்ந்த சீனியர் லிவிங் குடியிருப்பு திட்டத்தை உருவாக்க கொலம்பியா பசிபிக் குழுமத்துடன் இணைந்துள்ளதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த திட்டம் சென்னை மற்றும் பெங்களூரில் முதியோர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும்'' என்றார்.
முன்னதாக மார்ச் 2021ல் கொலம்பியா பசிபிக் குழுமம் மற்றும் ரியல் எஸ்டேட் டெவலப்பர் எம்பசி குழுமம் சார்பில் தெற்கு பெங்களூரில் செரீன் அமரா என்ற சீனியர் லிவிங் குடியிருப்பு திட்டத்தை ரூ.165 கோடி முதலீட்டில் அறிவித்தது. 2.44 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் திட்டம், தூதரக ஸ்பிரிங் டவுன்ஷிப்பில் சுமார் 288 ஏக்கர் பரப்பளவில் 239 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டிருக்கும். இந்தியாவில் முதியவர்கள் ரூ.10 பில்லியன் மதிப்பு கொண்டவர்களாக உள்ளனர். கொரோனா பரவலுக்கு பிறகு அதன் மதிப்பு என்பது 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக சிஏஜிஆர் (CAGR)தெரிவித்துள்ளது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications